Home » சண்டைக் களம் – 15
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 15

iii. குத்துச்சண்டையும் மற்போரும்

மற்போரும் குத்துச்சண்டையும் மனிதனிடம் இயல்பாகவே ஒட்டிக்கொண்டிருக்கும் இரட்டைச் சண்டைக்கலைகள். மனிதனிடமிருந்து அந்த இரண்டையும் பிரித்து எடுக்கமுடியாது. உலகின் மற்ற நாடுகளின் சண்டைக்கலைகளிலிருந்து மாறுபட்டு இருக்கும் கராத்தே, குங்க்ஃபூ, டெக்வாண்டோ போன்ற சண்டைக்கலைகள் தோன்றிய ஜப்பான், சீனா, கொரியா நாடுகளிலும் மற்போரும் குத்துச்சண்டையும் உள்ளன.

குழந்தை முதல் பெரியவர் வரையில் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டுமெனில் இயல்பாக எந்தெந்த உடலியல் இயக்கங்கள் வெளிப்படுமோ அவற்றைப் பட்டை தீட்டிச் சில நுட்பங்களைச் சேர்ப்பதுதான் குத்துச்சண்டையும் மற்போரும். குழந்தைப் பருவத்தில் பிடிக்காததைத் தள்ளிவிடுவதும், பிடிக்காதவர்களெனில் மேலே விழுந்து பிறாண்டுவதும் அடிப்பதும் யாரும் கற்றுக்கொடுத்து வருவதில்லை. இயல்பாகவே அவை மனிதனிடம் இருப்பவை. இந்த இயல்பினால்தான் மனிதன் முதன்முதலில் ஈடுபட்ட கைகலப்பு மற்போராக இருந்தது. இழுத்துப் பிடித்துக் கீழே தள்ளிய மற்போரிலிருந்து சிறிது மேம்பட்டு நுட்பமாகக் கைகளால் குத்தி வீழ்த்தும் குத்துச்சண்டையும் வந்தது.

மனித வரலாறு தொடங்கிய காலம் முதல் குத்துச்சண்டையும் மற்போரும் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். பண்டைய எகிப்திலும், ரோமிலும், கிரேக்கத்திலும் மற்போரும் குத்துச்சண்டையும் இருந்ததற்கான புடைப்புச் சிற்பங்களும். குகை ஓவியங்களும், மட்பாண்ட ஓவியங்களும் காணக் கிடைக்கின்றன. வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கின்ற பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றைய ஒலிம்பிக் விளையாட்டு வரையில் உயிர்ப்புடன் இருக்கும் இரண்டு சண்டைக்கலைகள் இவை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!