v. துருக்கி
அல்ஜீரியாவிலிருந்து மக்கா வரையில் உதுமானியப் பேரரசு பரவியிருந்தது. தோளின் வலிமையால் போர்கள் வெல்லப்பட்ட காலத்தில் உதுமானியப் பேரரசின் வீரர்களை வீழ்த்துவது அன்றைய மத்திய கிழக்குப் பகுதியின் கனவாக இருந்தது. வீரம் செறிந்தவர்கள் துருக்கியர்கள். அவர்களுடைய கலாசாரத்துடன் இணைந்து வளர்ந்த சண்டைக்கலையில் தேர்ச்சி பெற்றவர்கள்.
‘அல்பாகுத்’, துருக்கிய சண்டைக்கலைகளுள் ஒன்று. அல்ப் என்ற துருக்கியச் சொல்லின் பொருள், கதாநாயகன் அல்லது போராளி. குத் புனிதத்தன்மையைக் குறிக்கிறது. வீரனைப் புனிதனாக உருவகப்படுத்திப் பெயரிட்ட சண்டைக்கலை அல்பாகுத்.
கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து அன்றைய துருக்கிய நிலத்தில் நடந்த குடியேற்றத்தில் பழைய நாடோடி வாழ்க்கை முறைச் சண்டைக்கலையிலிருந்து பெற்ற உத்திகள் அல்பாகுத்தாக உருவெடுத்தன. துருக்கி நவீனத்தை நோக்கி நகர்ந்த காலகட்டத்தில் துருக்கியர் அல்பாகுத் சண்டைக்கலைப் பயிற்சியை மறந்தனர். நூற்றாண்டுகளாக மறந்துபோன அல்பாகுத்தைத் துருக்கியர் ஓர் இயக்கமாகச் செயல்பட்டு மீட்டெடுத்தனர். கை கால்களால் தாக்கிக்கொள்வதும் ஆயுதப் பயிற்சியும் அல்பாகுத் சண்டைக்கலையின் பிரிவுகள்.
நவீன அல்பாகுத் பயிற்சியாளர்களுக்கு அதனுடைய வரலாறும் பாரம்பரியமும் சொல்லப்படுகின்றன.
Add Comment