ix. ஐரோப்பா
எகிப்து, சீனா, துருக்கி, இந்தியா, ஜப்பான், ஈரான் என அனைத்து நாடுகளும் தங்கள் பாரம்பரிய சண்டைக்கலையை நவீனப்படுத்தின, சில சண்டைக்கலைகளை மீட்டெடுத்தன. அதைப்போலவே ஐரோப்பிய நாடுகளும் தங்கள் சண்டைக்கலைகளை ஒருங்கிணைத்தன. அந்த ஒருங்கிணைப்பு HEMA என அழைக்கப்படுகிறது.
ஹிஸ்டாரிகல் ஈரோப்பியன் மார்ஷல் ஆர்ட்ஸ் என்பதன் சுருக்கம் HEMA. ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா எனப் பரவலாக ஆங்கில மொழி பேசுபவர்கள் உள்ள பகுதிகளில் HEMA பழகப்படுகிறது. இதன் தொடக்கம் பிரிட்டன், ஸ்காட்லாண்ட், ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மன், இத்தாலி நாடுகளின் சண்டைக்கலைகளை உள்ளடக்கியது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பயிற்சி பெறப்படும் இதில் வாட்போர் முதன்மையானது.
பிரெஞ்சு, ஜெர்மன், பிரிட்டன் நாட்டின் நீளவாள் அமைப்பு பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டில் இருக்கிறது. ‘நீளவாள்’ எனப் பெயர் இருப்பதால் இதனுடைய கத்திப் பகுதி மிகவும் நீளமாக இருக்கும் என்பது பொருள் அல்ல; இவ்வாளின் கைப்பிடிப்பகுதி மற்ற வாள்களைவிடவும் நீளமாக இருக்கும். மூன்று கிலோ வரையில் எடைகொண்ட இதனை இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு சுழற்றி வாட்போர் புரிந்தனர். ஜெர்மனியிலும் இத்தாலியிலும் நீளவாள் பயிற்சிக்கென பிரத்தியேகப் பயிற்சிக்கூடங்கள் இருந்தன.
Add Comment