Home » பணத்தைக் குப்பையில் போடாதே!
ஆண்டறிக்கை

பணத்தைக் குப்பையில் போடாதே!

சரண்யா ரவிகுமார்

எனது எழுத்துப் பயணம் மெட்ராஸ் பேப்பரில் 2024இல் ஆரம்பித்தது. அந்த வருட ஆண்டறிக்கையில் இரண்டு முக்கிய இலக்குகளைப் பதிவிட்டிருந்தேன். ஒன்று, ஒரு புத்தகம் எழுதி முடிக்க வேண்டும். இரண்டாவது, மெட்ராஸ் பேப்பரில் என் கட்டுரையின் தரம் உயர வேண்டும். முதல் இலக்கை 2024 முடிவதற்கு முன்னரே முடித்து, புத்தகத்தை ஆசிரியர் பாராவுக்கு அனுப்பிவிட்டேன். புத்தகம் எப்படி வந்துள்ளது என்பதை அப்புறம் பார்க்கலாம், முடித்து அனுப்பிவிட்டேன். அவ்வளவுதான். பல மாதங்களாகப் போட்ட உழைப்பு ஒரு முழுமை பெற்றதே மனத்திருப்தி அளித்தது.

அதனால் இரண்டாவது இலக்கான எழுத்தை மேம்படுத்தும் பணியில் மும்முரமாக இறங்கினேன். அந்நாள்களில் நான் எழுதி அனுப்பும் கட்டுரைக்கும் எடிட்டரின் கைவண்ணத்தில் வெளிவரும் கட்டுரைக்கும் சம்பந்தமே இராது. அந்த நிலைமையில்தான் என் எழுத்து இருந்தது. பலருக்குச் சிரமமாக இருக்கும் எழுத்தொழுக்கத்தின் கஷ்டம் எனக்கு அன்று இல்லை. தொடர்ச்சியாக நாள் தவறாமல் ஒரு வருடமாகவே நான் தினமும் காலை எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் எழுதியதை முகநூலிலோ, வேறெங்காவதோ பிரசுரிப்பதில் ஓர் அச்சம் இருந்தது. தவறாக எழுதிவிடுவேனோ என்ற அச்சம்தான் அது. தொடர்ந்து முயற்சி செய்ததால் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!