வாகனாதிபதி யோகம் என்ற ஒரு விஷயம் ஜோதிடத்தில் உண்டு. மாறிவிட்ட சந்தைப் பொருளாதாரத்தில்,பெருகிவிட்ட சிறு மற்றும் குறு பைனான்ஸ் நிறுவனங்களும்,வங்கிகளும் கடனை வாரி வழங்குவதில் இந்த வாகனாதிபதி யோகம் இன்றைக்கு எல்லோருக்கும் அடிக்கிறது. இல்லை.. அடித்துத் துவைத்து வெளுக்கிறது என்றே சொல்லலாம். சில டவுன் பஞ்சாயத்துகள், பேரூராட்சிகளில் டூ வீலர் ஏஜென்சிகள் வெறும் ஒரு ரூபாயை மக்களிடமிருந்து முன்பணமாக பெற்றுக்கொண்டு முழுதொகையையும் கடனாக கொடுத்து வாகனங்களை வெற்றிகரமாக விற்பனை செய்கிறார்கள்.
வாகன ஷோரூம்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தினை நன்றாக அலங்கரித்து அந்த இடத்தில் வாகனத்தோடு உரிமையாளரை நிறுத்திவைத்து போட்டோ, வீடியோ எல்லாம் எடுத்து ஷோரூம் சேல்ஸ் மானேஜர் மற்றும் ஸ்டாப்புகள் அனைவரும் கைதட்டி பாராட்டுக்கள் தெரிவித்து, கிட்டத்தட்ட ஒரு மணப்பெண்ணை அனுப்பி வைப்பதை போல ஒரு வாடிக்கையாளரை வண்டியோடு அனுப்பி வைக்கிறார்கள். புதுவண்டியோடு ஷோரூம்களில் இருந்து வெளியே வரும்போது ஒரு மாப்பிள்ளை பீலிங் மனத்தில் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.
இன்றையத் தேதியில் ஒரு நடுத்தரக் குடும்பம் என்றால்கூட இரண்டு டூவீலர் நிச்சயம் வீட்டில் இருக்கிறது. இத்தனைக்கும் ஒரு டூவீலரின் லேட்டஸ்ட் மாடல் வண்டி குறைந்தபட்ச விலை… ரூபாய் ஒரு லட்சம். மக்கள் தயங்காமல் வாங்குகிறார்கள்.
informative article sir