சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சித் துறை அமைச்சகம், அந்நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 800 ஹெக்டேர் பரப்பளவில் கடலை தூர்த்து, நிலத்தை உருவாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. அதன் மீது மூன்று தனித் தீவுகளும் கட்டமைக்கப்படவுள்ளன. ‘புராஜெக்ட் லாங் ஐலேண்ட்’ என்பது இத்திட்டத்தின் தற்போதைய பெயர்.
சிங்கப்பூரின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு தாழ்வான நிலப்பகுதிதான். பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயரும்போது சில பகுதிகள் நேரடியாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதுபோக மழை, வெள்ளம் என்று வந்தால் நகருக்குள் நீர்புகுவதைத் தடுக்கவேண்டிய அவசியமும் உள்ளது. ஒரு குட்டித்தீவு தேசம் இந்தச் சவால்களைத் தவிர்த்து, கடலோரப் பகுதிகளை விடுத்து எங்கும் செல்ல இயலாது. அந்நாட்டின் ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு சதுரடியும் தங்கத்துக்குச் சமம்.
இவர்கள் இப்படிக் கடல் நீரின் மேல் நிலப் படுக்கையை உண்டாக்கி, அதன் மூலம் நாட்டை விரிவாக்குவது முதல் முறை அல்ல. இத்தகைய விரிவாக்கங்கள்தான் அங்கே நகர வளர்ச்சிக்கு மூலதனம்.















Add Comment