22. நட்சத்திரங்களும் நிலவும்
இளவயதில் சக்தியுடன் துள்ளும் உடல், முதுமையில் சுமையாகிவிடுகிறது. உடல் என்பது புலன்கள் என்ற ஐந்து கம்பிகள் கொண்ட இரும்புக் கதவுடன் கட்டமைக்கப்பட்ட ஓர் சிறைச்சாலை. ஆணவம், கர்மம் மற்றும் மாயை என்ற மூன்று சுவர்கள் சூழ்ந்து இருக்கிறது. பிறப்பு என்ற தண்டனையுடன் சிறையில் அடைக்கபட்டு நமக்கு விடுதலை என்பதே இல்லை என்ற நிலையில் ஐந்து புலன்களால் நாம் அடைபட்டு இருக்கிறோம்.
Add Comment