Home » சாத்தானின் கடவுள் -16
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் -16

16. பாம்பும் பறவையும்

இப்போது உண்டா என்று தெரியாது. முன்னொரு காலத்தில் குழந்தைகளுக்குத் தரப்படும் மாத்திரைகளில் இனிப்பு தடவப்பட்டிருக்கும். கடித்தாலும் கசப்பின் அளவு குறைந்து, மருந்து உள்ளே சென்று நோய் நீங்க வேண்டும் என்பதற்காக. அப்படித்தான் மூலாதார உண்மைகளும் தத்துவங்களும் தெரியாமல் போய்விடக் கூடாது என்பதற்காகக் கதைகளுக்குள் ஒளித்துத் தரும் வழக்கம் தோன்றியிருக்க வேண்டும். மதங்கள் உருவாகி, வலுப்பெறத் தொடங்கியபோது கதைகளின் பலத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு அதில் இன்னும் இன்னும் அற்புதங்களை ஏற்றிக்கொண்டே சென்றன. ஒரு கட்டத்தில், கதைகள் தெரிவிக்க வேண்டிய கருத்து நசுங்கிக் காணாமல் போய், அற்புதங்கள் மட்டும் ஜிகினாக் குப்பைகளைப் போலக் குவிந்து நிறையத் தொடங்கிவிட்டன.

ஒரு சிறிய உதாரணம் பார்க்கலாம். உலகமும் உயிர்களும் தோன்றிய வரலாற்றைச் சொல்ல வேண்டும். அனைத்தையும் தோற்றுவித்தவர் பிரம்மா என்று சொல்லியாகிவிட்டது. ஆனால் ஒவ்வொரு உயிரினமும் தோன்றிய விதம் வெளிப்பட வேண்டுமல்லவா? பிரம்மா நினைத்தார்; அனைத்தும் பிறந்தன என்று முடித்துவிடலாம்தான். ஆனால் அதில் சுவாரசியம் இராது. இங்கே கதை தேவைப்படுகிறது. எனவே,

படைப்பின் நிமித்தம் பிரம்மா சிந்திக்கத் தொடங்குகிறார். உலகமென்றால் உயிர்கள் தேவை. நீரில் வாழ்பவை. நிலத்தில் வாழ்பவை. வானில் பறப்பவை. காற்றில் கலந்தவை. நுண்ணுயிரிகள். மண்ணுயிரிகள். ஓரரிவு முதல் ஆறறிவு வரை அவற்றுக்குப் பிரித்துத் தரலாம் என்று ஓர் எண்ணம் உள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • மாயைகளில் மதிமயங்கும் வேளைகளில் நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டிய பொன்மொழி, “சுத்த அறிவே சிவம்”.

Click here to post a comment

இந்த இதழில்