Home » சாத்தானின் கடவுள் – 17
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 17

17. அகத்தியரும் சீர்காழி கோவிந்தராஜனும்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உரைநடையைப் படிப்பதற்கு நமக்குச் சிரமமாக இருக்கிறது. அன்று புழக்கத்தில் இருந்த பல சொற்களை இன்றைக்கு நாம் அறிய மாட்டோம். கிபி பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரைப் படித்தறியத் திணறிவிடுகிறோம். கம்பராமாயணம், நம்மாழ்வார் பாசுரங்கள், திருக்குறள் என்று எந்தப் புராதனப் பிரதியையும் உரை, உரைக்கு உரை, உரைக்கு உரைக்கு உரையின்றி நம்மால் படித்தறிய முடிவதில்லை. ஆனால், சரியாகக் காலம் கணிக்க இயலாத சித்தர் பாடல்கள் மட்டும் கேளப்பா, பாரப்பா என்று நேரடியாக நம்மைக் கூப்பிட்டுப் பேசுகிற பக்கத்து வீட்டுக்காரரின் மொழியில் இயற்றப்பட்டவையாக இருப்பது எப்படி?

இதை ஒரு பக்கம் உள்ளே போட்டு உருட்டிக்கொண்டே இருங்கள். இன்னொரு விஷயத்தைப் பார்ப்போம்.

சித்தர்களைக் குறித்துத் தெரிந்துகொள்ள விரும்பினால், ஆதிச் சித்தன் சிவனே என்று தொடங்குவது நம் மரபு. உலக உயிர்களுக்கு நல்லனவற்றை போதிப்பதன் பொருட்டு தட்சிணாமூர்த்தியாக அவதரித்து, எட்டு சீடர்களுக்கு ஞானோபதேசம் செய்து, அவர்கள் வழியாக வாழும் கலையை உலகுக்கு அளித்ததாகச் சொல்வார்கள்.

மீண்டும் கதை. மீண்டும் புராணங்கள். மீண்டும் மதம். வேண்டாம். நாம் அவற்றை விலக்கிவிட்டு யோசித்துப் பார்க்கலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • சோகத்துப்டன் பா.ரா. இந்தத் தொடரை யாரும் படிக்க வில்லை என்று முக நூலில் குறிப்பிட்டிருந்தார்.
    நான் படிக்கிறேன்.
    இது போதும் என்று னினைக்கிறேன்.
    அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்ற ஆவலைத் தூண்டும் தொடர்.

Click here to post a comment

இந்த இதழில்