Home » சாத்தானின் கடவுள் – 21
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 21

21. பற்று

உடலையும் மனத்தையும் வசப்படுத்துவதன் மூலம் சித்தத்தை சிவத்தில் நிலைநிறுத்த வழி சொன்ன சித்தர்களைப் பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். தவிர்க்க முடியாமல் இந்த இடத்தில் சித்தருக்கு எதிர்ப்பாதையில் சென்ற புத்தரைச் சிறிது கவனிக்க வேண்டியிருக்கிறது. கவனம். நாம் பவுத்தத்துக்குள் செல்லப் போவதில்லை. அது இங்கே அவசியமும் இல்லை. ஆனால் புத்தர் முக்கியம். அவர் ஞானமடைந்த விதத்தைத் தெரிந்துகொள்வது அதனினும் முக்கியம்.

புத்தரைப் பற்றிய கதைகளுள் மிகவும் பிரச்னைக்குரியது, அவர் ஏன் துறவு பூண்டார் என்பதற்குச் சொல்லப்படும் கதை. நமக்கு மிகச் சிறு வயதுகளிலேயே இந்தக் கதை சொல்லப்பட்டுவிடுகிறது. சித்தார்த்தர், மனக்குழப்பம் கொள்ளத்தக்க எந்தக் காட்சியையும் பார்க்கக் கூடாது என்ற கவனத்துடன் அவரது தந்தை அவரைப் பொத்திப் பொத்தி வளர்த்ததாகவும், அப்படியும் அவர் ஓர இறுதி ஊர்வலத்தையும் நோயால் அவதிப்படும் மனிதன் ஒருவனையும் வயோதிகத்தின் பிடியில் விழுந்தவர் ஒருவரையும் பார்த்துவிட்ட காரணத்தால் வாழ்வின் அவலங்களைப் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்து, அதன் விளைவாகத் துறவு பூண்டு சென்றார் என்று அந்தக் கதை நிறைவு பெறும்.

சிறிது யோசித்தாலும் இதன் பொருத்தமின்மை புரிந்துவிடும். சுத்தோதனர் தம் மகன் உலக வாழ்வின் துயரங்களை அறியாதிருக்க வேண்டும் என்று எண்ணியிருக்கலாம். கதையில் கண்டபடி அவரைப் பூட்டி வைத்தே வளர்த்திருக்கலாம். ஆனால் எத்தனை காலத்துக்கு?

சித்தார்த்தர் துறவு பூண்டது தனது இருபத்தொன்பதாவது வயதில். அப்போது அவருக்குத் திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியிருந்தன. ஒரு குழந்தை பிறந்திருந்தது. இருபத்தொன்பது வயது வரை ஓர் இளைஞன் மரணத்தையும் முதுமையையும் நோயின் அவலத்தையும் அறியாதிருந்திருப்பானா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • மிக அருமை சார்.
    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு – என்ற குறளுக்கேற்ப, புத்தர் ஞானமடைந்த கதையை மறுக்கவியலாத தர்க்க நியாயங்களுடன் விளக்கினீர்கள். கடவுள் இல்லை என்று சொன்ன புத்தர், கடவுளான வரலாற்றைக் கேட்க ஆவலாக உள்ளேன். அடுத்த அத்தியாயத்தை எதிர்நோக்கி…

    பி.கு.: “தகவமைப்பு”, “தகமைப்பு” என்று உள்ளது. தங்கள் கனிவான கவனத்திற்கு.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!