27. மீதமுள்ளது
அவனைத் தேடிப் புறப்பட்டு அதனைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருந்தது வளர்ச்சியா வீழ்ச்சியா என்று தெரியவில்லை. இந்த எண்ணம் வரும்போதெல்லாம் ஒரு குழப்பம் வரும். நிறைய யோசிப்பதாக எண்ணிக்கொண்டு, சிறிய குவளைக்குள் பாதி நிறைந்த தேநீரை ஆறச் செய்வதற்காக உருட்டிக்கொண்டே இருப்பது போல ஒரு புள்ளியைவிட்டுச் சற்றும் நகராமலேயே நின்றுகொண்டிருக்கிறோமோ என்கிற குழப்பம். இதற்குக் காரணம் உண்டு.
என் அப்பாவுக்கு இரண்டு அண்ணன்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவர் சுராஜ், எங்கள் குடும்பத்துக்கே முதல்வராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். எக்காலத்திலோ என்னவோ படித்து சப்-ரிஜிஸ்தாராக இருந்து ஓய்வு பெற்றவர். ஆனால், அதுவல்ல அவர். அவருக்குப் பண்டைய இலக்கியங்களில் ஆர்வம் உண்டு. பாரதி இயலில் விற்பன்னர். பாரதி கலைக் கழகம் என்ற அமைப்பினை உருவாக்கி, தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்கான நல்ல மரபுக் கவிஞர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர். அதற்கும் அப்பால் என் சிறு வயதில் அவரை பக்தியில் கனிந்த மனம் கொண்டவராக, மரபுவழி மத ஒழுக்கங்கள் தவறாதவராக, தீவிரமான இறை நம்பிக்கையாளராக உணர்ந்திருக்கிறேன். அவர்தாம் முதல் முதலில் தமது நண்பர் அமுதசுரபி விக்கிரமனிடம் சொல்லி எனக்கு அந்தப் பத்திரிகையில் வேலை வாங்கிக் கொடுத்தவர். பின்னாள்களில் நான் செய்த-செய்துகொண்டிருக்கும் அனைத்துக்கும் தொடக்கப் புள்ளி அதுதான் என்று தயங்காமல் சொல்வேன்.
2017 ஆம் ஆண்டு ராமாநுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டுக் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக, தினமலர் நாளிதழில் அவரது வாழ்வையும் பணிகளையும் விளக்கி ஒரு தொடரினை எழுத (பொலிக பொலிக) எனக்கு வாய்ப்பு அமைந்தது. மதச் சட்டகங்களுக்கு வெளியே நின்றுகொண்டு ஒரு மதவாதியின் மதத்துக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளை நுணுகிப் பார்க்க எனக்குக் கிடைத்த வாய்ப்பாக அதனை எடுத்துக்கொண்டு எழுதினேன். என் பெரியப்பா அந்தத் தொடரை மிகவும் கவனமாகவும் தீவிரமாகவும் படித்தார். பிறகு ஒருநாள் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது, ‘சீக்கிரமா கிளம்பற அவசரம் ஒண்ணும் இல்லன்னா உக்கார். உன்கிட்ட கொஞ்சம் பேசணும்’ என்று சொன்னார்.
இன்றைய சாத்தானின் கடவுள் அத்தியாயத்தில் வந்துள்ள பொலிக பொலிக நூலின் சிறு பகுதியால் அந்நூலினை நோக்கி ஈர்க்கப்பட்டு உள்ளேன். பெரியப்பா சரியான திசையில் செல்கிறார். பொலிக பொலிக நூலினை நோக்கி ஈர்க்கப்பட்டு உள்ள அடியேனும் சரியான திசையில் செல்ல பிரம்மம் வழிகாட்டட்டும்.
excellent! GOD is right but personification is not right. It only explains the theory by giving an image to it. It is a form of convenience.