7. அவனும் அதுவும்
ஆதியில் எங்கும் எதுவும் இல்லை. அல்லது எங்கிருப்பதும் தெரியாத அளவுக்கு கும்மிருட்டு சூழ்ந்திருந்தது. சூரியன் தோன்றியிருக்கவில்லை. பெருவெடிப்பு நிகழவில்லை. கிரகங்கள் உருவாகவில்லை. ஒன்றுமே கிடையாது. அமைதி என்கிற சொல் உருவாகாத காலத்து அமைதியைக் கற்பனை செய்துகொள்ள முடியுமானால், அதற்குள் விஷ்ணு உறங்கிக்கொண்டிருந்தான். அவன் எங்கிருந்து வந்தான் என்று தெரியாது. நான் தேடிக்கொண்டிருந்த ‘அவன்’, இவன்தானா என்றும் தெரியாது.
அது ஒருபுறம் இருக்கட்டும்.
மல்லாக்கப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தவனின் வயிற்றுப் பகுதியில் ஒரு சலனம் உண்டாகத் தொடங்கியது. கணப் பொழுதுதான். விஷ்ணுவின் தொப்புளிலிருந்து ஒரு தாமரைத் தண்டு மேலெழுந்து வந்தது. அது நடந்துகொண்டிருந்தபோதே தண்டின் நுனியில் மொட்டுவிட்டு இதழ் விரிந்து நின்றது.
இதெல்லாம் நடந்தது இருட்டில் எப்படித் தெரிந்தது, யார் பார்த்துச் சொன்னார்கள் என்று பிறகு விசாரித்துக்கொள்ளலாம். அந்தத் தாமரை மலருக்குள் இருந்து இன்னொருவன் தோன்றினான். அவன் தன்னை பிரம்மா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘நீ யார்?’ என்று படுத்திருக்கும் விஷ்ணுவைக் கேட்டான்.
‘நான், விஷ்ணு. உலகங்கள் அனைத்தும் எனக்குள் இருக்கின்றன. நீயும் என்னுள் இருந்துதான் வந்திருக்கிறாய்’ என்று சொன்னான்.
மதங்கள் எப்படி உருவாயின மற்றும் மத குருமார்கள் எப்படி உருவானார்கள் என்ற சிந்தனை
சிறப்பு.கடவுள் துகளை கண்டுபிடித்ததாக சமீபத்தில் விஞ்ஞானிகள் கூறினார்கள்.
மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் தொடர்ந்து தேடுகிறார்கள்.
எனில் மதப்பிரஷர் குக்கர்கள் இறைச்சோற்றினைச் சமைக்க எளியவழி என்கிறீர்கள்.
“சோறு ஒரு தரம், சோறு இரண்டு தரம், சோறு மூன்று தரம்” 😀
எப்படி சார் இப்படி எழுதுகிறீர்கள்..