மம்மியாக பதப்படுத்தப்பட்ட உடல்கள், ஐயாயிரம் வருடங்களுக்குப் பின்பும் வாசனையுடன் இருப்பதை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியம்? எப்படி இறந்த உடல்களை மம்மியாக்கிப் புதைக்கிறார்கள்? எப்படி இந்த வாசனை அப்படியே இருக்கிறது?
மம்மி என்ற சொல் மும்மியா என்ற பாரசீகச் சொல்லிலிருந்து கிளைத்ததாக இருக்கலாம் என்பது நம்பிக்கை. கருநிற மெழுகு என்று இந்தச் சொல் பூடகமாகப் பொருள் தருகிறது. நிலக்கீல் எனப்படுகிற கருப்புத் தாரை (Thar) ஒத்த கருநிற எரிபொருளைத்தான் பண்டைய காலத்தில் மும்மியா என்று வழங்கியிருக்கிறார்கள் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு.
மம்மிக்களில் இருவகைகள் உள்ளன. மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட வகை ஒன்று. இயற்கையாவே உருவானவை மற்றொன்று. மனித இனத்தால் வழிபாடு, சடங்கு, நம்பிக்கை, மறுமை போன்ற ஏதாவது ஒரு காரணத்துக்காக செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது, அல்லது இயற்கையாகவே தட்பவெட்பங்களின் மூலம் உடல் பதப்படுத்தப்பட்டு மம்மியாகிவிடும்.
பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் அவர்கள் மேலுலகிற்குச் செல்கிறார்கள் என்பது நம்பிக்கை. ஆன்மா உடனடியாகச் சென்றுவிட்டாலும், அங்கே புகுந்து வாழ கூடு தேவை என்பதால், இங்கே இவ்வுடல்களைப் பதப்படுத்தி வைத்தல் அவசியம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆகவே சடலங்களைச் செயற்கையாக பதப்படுத்தி, மம்மி ஆக்கி, சகல மரியாதைகளுடனும், சர்வ வாசனைகளுடனும் புதைத்திருக்கிறார்கள்.
Add Comment