பதினாறு வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது ஆஸ்திரேலிய அரசாங்கம். டிசம்பர் பத்தாம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஸ்னாப் சாட், எக்ஸ், திரெட்ஸ் போன்ற பெரும்பாலான ஊடகங்கள் இதில் அடங்கும்.
முதலில் யூடியூபுக்கு விலக்கு அளிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது, ஏனெனில் அது கற்றலுக்கான ஊடகமாகவும் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் பிற சமூக ஊடகங்கள் விளைவிக்கும் அதே பாதிப்புகளை யூடியூபும் ஏற்படுத்துகிறது என்பதால் அதுவும் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அரசின் இந்த உத்தரவுப்படி, பதினாறு வயதுக்குட்பட்டவர்கள் புதுக்கணக்குகள் தொடங்குவதைச் சமூக ஊடகங்கள் அனுமதிக்கக்கூடாது. ஏற்கெனவே இருக்கும் கணக்குகளைச் செயலிழக்கச் செய்ய வேண்டும். அவர்கள் பதினாறு வயதைக் கடந்த பின் அவற்றை மறுபடியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.















Add Comment