கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென்கொரியாவில் ராணுவ ஆட்சியைக் கொண்டுவர முயன்றதற்காக அப்போதைய ஜனாதிபதி யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் மனைவி, ஐந்து பூனைகள், எட்டு நாய்கள் என வாழ்ந்துவந்தார். வெளியே இருக்க அனுமதித்தால் அவர் வழக்கு சார்ந்த ஆதாரங்களைக் கலைக்க முயலலாம் என வழக்கறிஞர்கள் வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம், அவரை மீண்டும் கைது செய்ய உத்தரவிட்டது.
முதல்முறை கைது செய்யப்பட்டபோது ஐம்பத்திரண்டு நாள்கள் சிறையில் இருந்தார் யூன். ஐந்தரை மில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட யூன் சுக் யோல், தற்போது இருப்பது ஏசி வசதிகள் இல்லாத பத்து சதுரடித் தனிச்சிறையில். இருபது நாள்கள் வரை இந்தக் காவல் நீட்டிக்கப்படும். அதற்குள் எதிர்த்தரப்பினர் இவர் மீது தகுந்த ஆதாரத்துடன் கூடிய குற்றப் பத்திரிகையைத் தயார் செய்ய வேண்டும்.














Add Comment