Home » இரண்டு
சிறப்புப் பகுதி

இரண்டு

அமன்சியோ ஒர்டேகா

கந்தையில் இருந்து கனவு வாழ்க்கைக்கு

அமன்சியோ ஒர்டேகா (Amancio Ortega) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர். ஃபேஷன் உலகிலிருந்து உதித்த இன்னுமொரு பணக்கார நட்சத்திரம். 130 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்போடு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.

2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சில மணி நேரங்கள் பில்கேட்சை பின்னுக்குத் தள்ளி ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அப்போது அமன்சியோ தன் நிறுவனப் பொறுப்புகளிலிருந்து ஓய்வுபெற்று நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. மீண்டும் 2016ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். எத்தனையோ பணக்காரர்கள் வருடக் கணக்கில் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். இங்கே அது முக்கியமல்ல. அமன்சியோ போன்ற ஒருவர் மிக எளிய குடும்பத்தில் பிறந்து இந்த நிலையை எட்டியதும் தொடர்ந்து பட்டியலில் இருப்பதும் மிக மிக முக்கியமானது. முதல்முறை அவர் முதலிடம் பிடித்தபோது ஸ்பெயின் மக்கள் கொண்டாடினார்கள். ஆனால் அவர் வழக்கம்போல எந்த ஊடகங்களையும் சந்திப்பதைத் தவிர்த்தார்.

அமன்சியோவுக்கு அப்போது பதிமூன்று வயது. ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்த மாலைப்பொழுது. அமன்சியோவும் அவரது அம்மாவும் அருகிலிருந்த கடைக்குச் சமையல் பொருள்களை வாங்கச் சென்றார்கள். எப்போதும் இயல்பாக இது நடப்பது தான். ஆனால் அன்றைய நாள் அவர்களுக்கு இயல்பாக இருக்கவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!