மூக்குக் கண்ணாடியைக் கழற்றி கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர். ப்ளாஷ் வெளிச்சங்கள் மின்னின. பாவமன்னிப்புப் படலம் ஆரம்பமாகியது.
‘2005ம் ஆண்டு நான் ஒரு சின்னத் தப்பு செய்துவிட்டேன் மக்களே..! சுனாமி நிதியை மோசடி செய்ததாய் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு என்னிடம் வந்தது. சரியான தீர்ப்பைக் கொடுத்து மகிந்தவின் அரசியல் வாழ்க்கைக்கே ஆர்ட்டிலரி தாக்குதல் நடத்தி இருக்கலாம். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. இப்போது என் மனச்சாட்சி உறுத்துகிறது. ஐயாம் ஸாரி!’
வெலவெலத்துப் போனது மீடியா மட்டுமல்ல… ஒட்டுமொத்த நாடும்தான்.
Add Comment