இந்த வாரத்துடன் ஜனாதிபதி ரணிலுக்கும், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சேவுக்குமிடையில் தேர்தல் உடன்பாடு தொடர்பாய் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டன. இப்படியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதனால் ரணிலின் வயிறுதான் ஒரு சுற்றுப் பருத்துப் போகிறதே தவிர கண்ட பலன் எதுவுமில்லை. மறு பக்கத்தில் ராஜபக்சேக்களின் கவலைகளின் பரப்பளவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பெசில் ராஜபக்சே தான், சிங்களத்தில் ‘பொஹட்டு ‘என்று சுருக்கமாய் அழைக்கப்படும் பொதுஜன முன்னணிக் கட்சியின் நிறுவனர். அதன் தலைவராய் மகிந்த ராஜபக்சே இருக்கிறார். 2019-ம் ஆண்டு, மகிந்த ராஜபக்சேவுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாதபடி அரசியல் யாப்பு குறுக்கே நின்றது. பெசில் ராஜபக்சேவுக்கு இரட்டைக் குடியுரிமை தடையாய் அமைந்தது. நாட்டைக் காப்பாற்றிக் கரை சேர்க்க இனவாதிகளும், தேசியவாதிகளும் கடைசியில் அரசியலில் அரிச்சுவடி தெரியாத கோட்டபயவை அழைத்து வந்தார்கள். கோட்டாபயவும் 2015 – 2019 காலப்பகுதியில் சிங்கள பவுத்த கண்ணாடியைப் போட்டுக் கொண்டு தன்னை விட்டால் ஆளில்லை என்று இருந்தவர். லீகுவான் யூ, மஹாதீர் மொஹமட், ஜவஹர்லால் நேரு, விளாதிமிர் புதின் போன்றோரின் குணங்கள் ஒன்று சேர்ந்த பெரும் தலைவர் என்று விளம்பரப்ப்படுத்தப்பட்டவர். கோட்டாபயவுக்கும் பெசிலைப் போல அமெரிக்க குடியுரிமை இருந்தது. இலங்கையை ஒட்டுமொத்தமாய்ச் சுடுகாட்டிற்குள் புதைக்க அவர் அதைத் துறந்தார். பொதுஜன முன்னணியின் வேட்பாளர் ஆனார். மீதி சரித்திரம்
Add Comment