Home » முட்டிக்கொள்ளும் முப்பத்தொன்பது வேட்பாளர்கள்
உலகம்

முட்டிக்கொள்ளும் முப்பத்தொன்பது வேட்பாளர்கள்

ரணில், சஜித் , அநுர , நாமல்

ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் கச்சேரிக்கான சகல ஏற்பாடுகளும் ஆகஸ்ட் 15ம் தேதி வேட்பு மனுத்தாக்கலுடன் ஆரம்பமாகிவிட்டன. மொத்தம் முப்பத்தொன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எதற்கு இத்தனை பேர் என்று ஆச்சர்யமாய் இருக்கிறதா? அப்படித்தான். தேர்தல் திணைக்களத்தைக் கடக்கும் போது பையில் ஐம்பதாயிரம் காசு இருந்தால் யார் வேண்டுமானாலும் வேட்பாளராகிக் கொள்ளலாம். இப்படி ஒரு கூத்து நடப்பது பற்றி கின்னஸ் சாதனைப் பதிவேட்டில் பதியப்பட்டுவிட்டதா என்று தெரியவில்லை. எது எப்படியோ இந்தத் தேர்தல் பந்தயத்தில் கவனம் ஈர்த்திருப்பது வெறும் நான்கு பேர் தான்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டமைப்பின் தலைவருமான சஜித் பிரேமதாஸ.

ஜே.வி.பி தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க.

பொதுஜன முன்னணியின் வேட்பாளர் நாமல் ராஜபக்சே.

இத்தனை நாளாய் ராஜபக்சேக்களின் குடும்ப தயவில் ஆட்சி செய்து வந்த ரணிலுக்கும் ராஜபக்சேக்களிற்கும் இறுதிக்கட்டப் பேரம் பேசலின் போது ஏதோ வரப்புத் தகராறாகிவிட்டது. ‘நம் கட்சி சார்பாய் ஒரு வேட்பாளரை இறக்கியே ஆகவேண்டும். ரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பது எமது எதிர்காலத்திற்கு சரிப்பட்டு வராது’ என்று விடாப்பிடியாய் இருந்தார் மகிந்த ராஜபக்சேவின் புதல்வர் நாமல் ராஜபக்சே. வயதும் அனுபவமும் மிகுந்த மகிந்தவிற்கு இதைப் போன்ற முட்டாள்தனம் வேறு இல்லை என்று தெரியும். இருந்தாலும் என்ன செய்வது? அரசிளம் குமாரனின் கோரிக்கையைத் தட்டவா முடியும். ‘சரி மகனே! உன்னிஷ்டம். நீயே நின்று கொள் ‘ என்றார். விளைவு, அது நாள் வரை பொதுஜன முன்னணியில் ராஜபக்சேக்களுக்கு சாளரம் வீசிய நூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அப்படியே ராஜபக்சேக்களைக் கழற்றிவிட்டு ரணில் பக்கம் ஒரு அந்தர் பல்டியடித்தார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்