Home » வரலாற்றின் வானொலி சாட்சி
உலகம்

வரலாற்றின் வானொலி சாட்சி

இலங்கை வானொலி நூறு ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. ஆல் இண்டியா ரேடியோவை விடப் பதினோரு ஆண்டுகள் மூத்தது ரேடியோ சிலோன் என அழைக்கப்பட்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். ஆசியாவின் முதல் வானொலி இலங்கை வானொலிதான். அதனால்தான் அன்னை வானொலி என்று மக்கள் இன்றும் இதனை அன்போடு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை மக்களைப் போலவே இந்திய மக்களின் நினைவுகளிலும் உணர்வுகளிலும் கலந்துவிட்ட வானொலிச் சேவை என்றால் இலங்கை வானொலியைச் சொல்ல முடியும்.

‘பிறந்தநாள்… இன்று பிறந்தநாள்… நாம் பிள்ளைகள் போலே… தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்… Happy Birthday to You…’. சென்னையில் இருந்து இலங்கை வானொலியைப் பார்வையிட இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்திருந்த எழுபது வயது மதிக்கத்தக்க பெண் இதனைத்தான் விரும்பிப் பாடினார். இன்றும் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லப் பயன்படும் நிலையக் குறியிசை இது. அவர் பாடி முடித்ததும் வானொலி கலையகத்திலும் அந்த நிலையக் குறியிசையை ஒலிபரப்பியபோது அவரது முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. இலங்கை சென்றால் இலங்கை வானொலிக்குத்தான் முதலில் போக வேண்டும் என்று அடம்பிடித்து குடும்பத்தோடு வந்திருந்தார் அவர்.

இவர் மட்டுமல்ல, எண்பதுகளுக்கு முன்பு யாரெல்லாம் வானொலி கேட்டார்களோ அவர்கள் எல்லாம் இலங்கைக்கு வரும்போது இலங்கை வானொலி கலையகத்துக்கும் வரத் தவறுவதில்லை. அந்த அளவுக்குத் தமிழ்நாட்டுடனும் அதற்கு அப்பாலும் பிணைப்புகளைக் கொண்டது இலங்கை வானொலி. 1950களில் தமிழ், ஆங்கில மொழிகளில் இலங்கை வானொலியின் சேவை விரிவாக்கப்பட்டது. அப்போது இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி ஒலிபரப்புகளையும் இலங்கை வானொலி மேற்கொண்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!