மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே அதிகாரம் வாக்குச்சீட்டு மட்டும்தான். யாரையாவது வாக்களித்துத் தெரிவு செய்துவிட்டால் அவராகப் பதவியைக் காலிசெய்து போகும்வரை பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். எந்தளவு ஜனநாயக நாடு என்றாலும் இதுதான் நிலைமை. மக்கள் புரட்சி, புடலங்காயெல்லாம் எப்போதாவது நடந்தால்தான் உண்டு.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடந்து ஒருவருடம் ஆகப்போகிறது. மக்களின் பெரும்பான்மை ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்தார் அனுர குமார திசாநாயக்க. நாடாளுமன்றத்தையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு தன்வசப்படுத்தினார். சிறந்த பேச்சாளர். எத்தனை மணிநேரம் பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒற்றைக் குறிப்புமின்றிப் பக்கம் பக்கமாகப் பேசுவார்.
சந்தேகமில்லாமல் அனுர குமார என்பவர் பெரும்பான்மை சிங்கள மக்களின் தேர்வுதான். தமிழர்களில் கடந்தகாலக் கசப்புணர்வுகளில் இருந்து விலகி நின்று, அரசியல் மாற்றம் தேவை என்று நினைத்தவர்கள் மட்டுமே அவருக்கு வாக்களித்தார்கள். அவர் சார்ந்த ஜே.வி.பி. கட்சியினால் கடந்தகாலத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மக்களும், தமது இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று நினைத்தவர்களும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களித்தார்கள். இது வடக்கு, கிழக்கு தமிழர்கள் தெற்கிற்கு வழங்கிய வலுவான செய்தி. ஆனால் இந்தச் செய்தி அனுரவின் காதுகளுக்குப் போனதா என்பது சந்தேகமே. என்றாலும் மலையகத் தமிழர்கள் அனுரவுக்கும், சஜித், ரணில் போன்ற எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கும் தமது வாக்குகளை வழங்கியிருந்தனர். அங்கு இருக்கும் அரசியல் வேறு.















Add Comment