Home » ஸ்டார்லிங்க் நல்லதா கெட்டதா?
கணினி

ஸ்டார்லிங்க் நல்லதா கெட்டதா?

இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணைய சேவைகளை வழங்கும் உரிமத்தைப் பெற்ற மூன்றாவது நிறுவனமாக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) மாறியுள்ளது. இதற்கு முன்னர், யூடெல்சாட்- ஒன்வெப் (Eutelsat-OneWeb) மற்றும் ஜியோ-எஸ்.இ.எஸ் (Jio-SES) ஆகியவை இந்த உரிமத்தைப் பெற்றுள்ளன. இந்தியத் தொலைத்தொடர்புத் துறை விரைவில் அந்நிறுவனத்திற்கான சோதனை அலைக்கற்றைகளை ஒதுக்கும். சோதனை ஓட்டத்தில் இந்திய அரசின் பாதுகாப்பு நிபந்தனைகளை உறுதிசெய்யும்பட்சத்தில், வணிகப் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார்லிங்க் வழங்கப் போகும் செயற்கைக்கோள் வழி இணைய சேவையைப் புரிந்து கொள்ள, தற்போது பரவலாக இருக்கும் ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவையும், நாம் மொபைல்களில் பயன்படுத்தும் 4ஜி/5ஜி கம்பியில்லா இணைய சேவையும் இயங்கும் விதத்தை முதலில் பார்க்கலாம். முதல் வகையான ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவைக்கு ஜியோ ஃபைபர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்றவை உதாரணங்கள். மனித உடலுக்குள் தகவல்களைப் பரிமாற இயற்கை, நரம்புகளைப் புதைத்துள்ளது போல, மனிதன் பூமியைத் தோண்டி ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களைப் புதைத்துள்ளான். இந்த ஆப்டிகல் ஃபைபர்கள் தரவுகள் கொண்ட இணைய சிக்னல்களை ஒளியாக மாற்றி மிக வேகமாக கடத்தக்கூடியவை.

இந்த ஆப்டிகல் ஃபைபர்கள் இரு சிறு நகரங்களை இணைக்கின்றன. சிறு நகரங்களை பெருநகரங்களுடன் இணைக்கின்றன. இந்தியத் தீபகற்பத்திலுள்ள ஒரு நகரத்தை அந்தமான் தீவின் தலைநகருடன் இணைக்கின்றன. தேசங்களை இணைக்கின்றன. பெருங்கடல்களுக்குள் புதைக்கப்பட்டு கண்டங்களையும் இணைக்கின்றன. ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை இப்போது பெருநகரங்கள் தாண்டி சிறு நகரங்களிலும் கிடைத்து வருகிறது. இந்தக் கட்டுரையை நீங்கள் ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை மூலம் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உலகளாவிய அதிவேகமான வலைப்பின்னலின் ஒரு முனையை உங்கள் கணினியுடன் இணைத்துள்ளீர்கள் என அர்த்தம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!