Home » காணாமல் போன கனவுத் தொழிற்சாலை!
வெள்ளித்திரை

காணாமல் போன கனவுத் தொழிற்சாலை!

சினிமாத்துறையை வைத்து எழுதிய நாவலுக்குக் ‘கனவுத் தொழிற்சாலை’ என்று பெயரிட்டார் சுஜாதா. அந்தத் தலைப்பை அவர் தருவதற்குக் கிட்டத்தட்ட அறுபதாண்டுகளுக்கு முன்பே திரைப்படத் தயாரிப்பை ஒரு தொழிற்சாலை நடத்துவதைப் போல கட்டுக்கோப்பாகவும், நேர்த்தியாகவும், ஒழுக்கமாகவும், முக்கியமாக- லாபகரமாகவும் நடத்திக் காட்டிய ஒருவர் உண்டு.

அவர் பெயர் டி.ஆர்.சுந்தரம். அவர் நடத்திய நிறுவனம் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’. சேலம் மாவட்டத்தில்,ஏற்காடு செல்லும் வழியில் சுமார் பத்து ஏக்கர் அளவு நிலப்பரப்பில் ஒரு ஸ்டூடியோ அமைத்து, அதன் உள்ளேயே படப்பிடிப்புத் தளம், இசை அரங்கம், எடிட்டிங் ஏரியா, எடுத்த படத்தைப் போட்டுப் பார்ப்பதற்கு ஒரு ப்ரிவியூ தியேட்டர், நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்குவதற்கு குடியிருப்புப் பகுதி இன்னும்.. சினிமா சார்ந்த அனைத்து தேவைகளையும் ஓரே கூரையின் கீழ்அமைத்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, திரைப்படங்கள் தயாரித்த அதிசய மனிதர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!