Home » அமைதி பாதி, அபாயம் மீதி
உலகம்

அமைதி பாதி, அபாயம் மீதி

சர்வதேச அரசியல் களத்தில் வல்லரசுகளின் பகடைக்காயாகத் தாறுமாறாக வீசி எறியப்பட்டும், நீண்டகாலக் கொடூரமான போர்ப் பின்னணியைத் தாங்கியபடியும் இன்று வரை அவதியுறும் நாடு சிரியா. அரபு உலகில் ‘அல் ஸாம்’ என அழைக்கப்படும் சிரியா, மேற்காசியாவில் அமைந்துள்ள ஒரு குடியரசு. வடக்கே துருக்கியும், கிழக்கே இராக்கும், தெற்கில் ஜோர்டானும், மேற்கில் லெபனான் மற்றும் மத்தியத் தரைக்கடலும், தென்மேற்கில் இஸ்ரேலும் இதற்கு எல்லைகளாக அமைந்துள்ளன.

உதுமானிய அரசாட்சியில் இணைக்கப்பட்டிருந்த சிரியா, முதலாம் உலகப் போருக்குப் பின் ஃபிரான்ஸின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1946ஆம் ஆண்டு சுதந்தரம் பெற்ற பின் 1970ஆம் ஆண்டு வரை அங்கு ராணுவப் புரட்சிகளும் ஆட்சிக்கவிழ்ப்புகளும் தொடர்கதைகளாக இருந்தன.1970ஆம் ஆண்டு, பாத் சோசியலிசக் கட்சியின் ஹாபிஸ் அல் அஸாத் சிரிய அதிபராகப் பதவியேற்றார்.

2002ஆம் ஆண்டு ஹாபிஸ் மரணம் அடைந்ததையடுத்து அவரது மகன் பஷர் அல் அஸாத் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பஷர் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் சிரியாவில் மக்களாட்சி வீழ்ச்சியின் வெளிப்பாடாகப் பிரதிபலிக்கப்பட்டு மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தது. புரட்சியாளர்களை பஷர் இரும்புக்கரம் கொண்டு அடக்கி அவர்களைச் சிறையில் அடைத்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!