அறுநூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள். இருபது லட்சத்துக்கும் அதிகமானோருக்குப் பாதிப்பு. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிவடைந்துள்ளன. பல கிராமங்கள் மண்ணில் புதையுண்டுள்ளன. பெரும்பாலான நகரங்கள் நீரில் மூழ்கின. மக்களின் சொத்துக்கள் அழிவடைந்தன. பள்ளி மாணவர்களின் புத்தகங்கள், நோட்டுகள், கல்விச் சான்றிதழ்கள்...
Tag - இலங்கை
2004ஆம் ஆண்டு சுனாமியினால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு ஓரிரு தடவைகள் இலங்கை பாரிய வெள்ள அனர்த்தங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால் முழு இலங்கையும் ஒருசேரப் பாதிக்கப்பட்டது இதுவே...
இனங்களுக்கிடையிலான மோதல், அதிகாரப் போட்டி, யுத்தம் என 75 ஆண்டுகளாக இலங்கை சீரழிந்திருக்கிறது. கடந்த காலங்களில் பிடிக்காதவர்களை ஒழித்துக் கட்டுவதற்காகவும், பிரச்சினைகளைத் தூண்டி விடுவதற்காகவும் அடியாள் வைத்துக் கொள்ளும் கலாசாரம் இருந்தது. முக்கியமாக, யுத்த காலத்தில். அடியாட்கள் கட்டளையிடுபவரின்...
ஒன்றல்ல, இரண்டல்ல, ஐம்பதாயிரம் கிலோ ஐஸ் என்னும் போதைப் பொருளைத் தயாரிக்கும் ரசாயன மாதிரிகள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் பாதுகாப்புப் பிரிவில் வேலை செய்த போலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டு முற்றத்தில் இருந்து மீட்கப்பட்டன என்றால் நம்ப முடிகிறதா? இந்தப் போதைப் பொருள் மாஃபியாக்களின் குட்டு...
கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி 2025 கோலாகலமாக ஆரம்பித்திருக்கிறது. கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எட்டுக்கும் மேற்பட்ட அரங்குகளில், 400க்கும் மேற்பட்ட விற்பனைக் கூடங்களில் மாபெரும் ஜனத்திரளுக்கு மத்தியில் இம்முறை கண்காட்சி தொடங்கியிருக்கிறது செப்டம்பர் 26 ஆரம்பமான...
அநுரகுமார திஸாநாயக்க, சகல அதிகாரமும் அமையப் பெற்ற இலங்கை ஜனாதிபதிப் பதவியில் அமர்ந்து சரியாய் ஓராண்டாகின்றது. நிறைய பிளஸ்களும், ஒரு சில தடுமாற்றங்களுமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது ஆட்சி. 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுர வென்றபோது, எந்தவிதப் பிரபுத்துவப்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தைத் தவிர அத்தனை சிறப்புச் சலுகைகளையும் பறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிகு சட்ட வரைவு இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ‘முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ஒழிப்பு’ என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசு...
பொதுநிதியைத் தன் தனிப்பட்ட லண்டன் பயணத்திற்குப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எனப்படும் சிஐடியால் ஆகஸ்ட் 22ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இலங்கையின் சரித்திரத்தில் முதன்முறையாக நடைபெறும் ஒரு அரசத் தலைவரின்...
மார்ச் 2023. இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் ஓர் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது. குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம பகுதியில் உள்ளது மூவாகந்த எனும் தோட்டம். அதில் வசிக்கும் ஜீவரட்ணம் சுரேஷ்குமார் எனும் இளைஞர்தான் இந்த மனுவைத் தாக்கல் செய்தவர். தனக்கும், தான் வாழும் ஊர் மக்களுக்கும் நிரந்தர...
அநுரகுமார திஸாநாயக்க, சகல அதிகாரமும் அமையப் பெற்ற ஜனாதிபதிப் பதவியில் அமர்ந்து எட்டு மாதங்களும், அவரது ஜே.வி.பி கட்சி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு என்ற அதீதப் பலத்துடன் ஆட்சி அமைத்து ஆறு மாதங்களுமாகின்றன. ஊழல் ஒழிப்பு, வீண் விரயமில்லாத சிக்கனமான நிர்வாகம்...












