நம் அனைவருக்கும் ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரம். இதில் பாரபட்சம் கிடையாது. இந்த நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து வாழ்க்கையில் நாம் அடையும் வெற்றி தீர்மானமாகிறது. எப்படிப் பயன்படுத்துவது என்பது திட்டமிடலில் உள்ளது. நேரம் வீணாவதையும் தேவையற்ற செயல்களில் நம்மை...
Tag - உலகம்
செப்டெம்பர் 8, 2022 அன்று ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. பிப்ரவரி 6 1952லிருந்து எழுபது ஆண்டுகள், ஏழு மாதங்கள், மூன்று நாட்கள் பிரிட்டனின் ராணியாகவும், கனடா, அவுஸ்திரேலியா உட்படப் பல பொதுநலவாய நாட்டு (காமன்வெல்த் நாடுகள்) அரசுகளின் தலைவியாகவும் (ஹெட் ஆஃப் த ஸ்டேட்) இருந்த இரண்டாம் எலிசபெத் ராணி...
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் அந்நாட்டின் பிரதமர் லிஸ் ட்ரஸுடன் எடுக்கப்பட்டதுதான். அடுத்த நாற்பத்து எட்டாவது மணி நேரத்தில் அவர் இறந்தார். இதுபோல இந்தியாவில் ஒரு சம்பவம் நடந்திருந்தால், புதிய பிரதமரின் ராசியை நடு ரோடில் இழுத்துப் போட்டு நாறடித்திருப்பார்கள்...
‘ஸீடிங்’ என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும். விதைத்தல். ‘க்ளவுட் சீடிங்’ என்றால் என்னவென்று தெரியுமா..? அப்படியே மொழிபெயர்த்து ‘மேகத்தை விதைப்பது அல்லது மேகத்தில் விதைப்பது என்றால் குழப்பும். ஆனால், மேகத்தை மெலிதாக ஏமாற்றுவது எப்படி, அதனால் என்ன பயன் என்பதைத் தெரிந்து கொண்டால் முழுமையாகப்...
சமீப காலமாக மிக அதிகம் பேசப்படுகிற சங்கதிகளுள் ஒன்று, ‘க்ரிப்டோ கரன்ஸி’. அது ஒரு அச்சிடப்படாத, கண்ணுக்குத் தெரியாத பணம். தற்போது எப்படி கிரெடிட் கார்டு, ஜீபே என்று காகிதப் பணத்திற்கு மாற்றாக, கார்டுகள், செயலிகள் உள்ளனவோ அது போலவே காகித பணத்திற்கு மாற்றாக ஒரு பண்டமாற்று முறை வேண்டும் என்று தனிப்பட்ட...
சோவியத் யூனியனின் சிதைவுக்குக் காரணம் என்று பெரும்பாலான ரஷ்யர்களாலும் அதிபர் புதினாலும் சுட்டுவிரல் நீட்டப்படும் முன்னாள் சோவியத் யூனியனின் அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான மிக்கைல் கோர்பசேவ் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி இயற்கை எய்தினார். நிறை வாழ்வுதான். சந்தேகமில்லை. புதின் அவரது...
ஒரு குறிப்பிட்ட இனக் குழுவில் பிறந்த குழந்தைகள், நினைவறிந்த நாளாக அச்சத்திலும் கவலையிலுமே வளர்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? வாழ்வோமா என்பது அச்சத்தின் காரணம். நம்மாலும் பள்ளிக்குச் சென்று படிக்க முடியுமா, எல்லோரையும் போல கௌரவமான ஒரு வாழ்க்கை வாழ முடியுமா என்பது கவலை. ரோஹிங்கியா இனக்குழுவைச்...
பெற்றோரைத் தவிர பிற அனைத்தையும் வாங்க முடிகிற துபாய் மால்களில் ஒன்றில் எனக்கான செருப்புக் கடை ஒன்றைக் கண்டுபிடித்து வைத்திருந்தேன். எல்லா மால்களிலும் செருப்புக் கடைகள் உண்டு, விதவிதமான செருப்புகள் கிடைக்கும் என்றாலும்கூட, துபாய் மாலில்தான் புது வரவுகள் இருக்கும். அழகான செருப்பு என்பதைவிட, என்...
கடந்த வாரம் தமிழ்நாட்டின் தொழில் மேம்பாட்டுத் திறன் இணையத்தளம் திடீரென உலக அளவில் கவனம் பெற்றது. டிவிட்டரில் பலராலும் பாராட்டப்பட்டு, பகிரப்பட்டது. மனிதவளத்துறையில் பணியாற்றுவதால் ஆர்வம் மேலிட, இணையத்தளம் சென்று பார்வையிட்டேன். ஒபாமா – சிங் உடன்பாட்டு முறையில் இந்தியாவில் கல்வித்துறையை மேம்படுத்த...
உலகில் வேறெந்த நாட்டு ஜனாதிபதிக்கும் இவ்வளவு அதிகாரங்கள் இருக்காது. இலங்கை ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள் எல்லை கடந்தவை. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்திரண்டாம் ஆண்டு இலங்கை குடியரசானபோது முதலாவது அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. கவர்னர் ஜெனரலாய் இருந்த வில்லியம் கோபல்லாவ என்பவர் ஜனாதிபதியாகிக்...













