Home » காங்கிரஸ் » Page 2

Tag - காங்கிரஸ்

இந்தியா

இன்னும் எம்மை என்ன செய்யப் போகிறாய் அன்பே, அன்பே!

97 கோடி வாக்காளர்கள் பங்குபெறும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மிக நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்தத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இந்தியாவை ஆளப்போகும் அடுத்த தலைவர் யார் என்பது அடுத்த வாரம் இதே நாளில் தெரிந்திருக்கும்...

Read More
இந்தியா

பிரதமர் இப்படிப் பேசலாமா?

மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இதுவரை ஐந்து கட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த முறை நானூற்றுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கையில் தன் பிரசாரத்தைத் தொடங்கியிருந்தார் மோடி. ஒவ்வொரு கட்டமாகத் தேர்தல் முடிய முடிய அந்த நம்பிக்கைக் கோட்டையின் மீது விரிசல் விழத்...

Read More
இந்தியா

ஆம் ஆத்மி: வளர்ச்சியும் கைதுகளும் சொல்வது என்ன?

காலம் எவ்வளவு வேகமாகச் செல்கிறது பாருங்கள்…. ஊழலை ஒழிப்போம் என்று கொடி பிடித்துக் கட்சி ஆரம்பித்த ஆம் ஆத்மி தலைவர்கள் இன்று ஊழல் வழக்கில் கைதாகிச் சிறையில் இருக்கிறார்கள். அதுவும் பதவியில் இருக்கும்போதே முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ‘பதவி வந்ததும் மாறி விட்டாரா? அல்லது...

Read More
இந்தியா

உபி எனும் தீர்மானிக்கும் சக்தி

இந்தியப் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சக்தியாக இருப்பது உத்திரப் பிரதேச மாநிலம். அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்றத் தொகுதிகள் உடைய இந்திய மாநிலம். மத அரசியல் மையம் கொண்டிருக்கும் மாநிலமும் இதுவே. இதைப் பாரதிய ஜனதா கட்சியின் தனிப்பட்ட சாதனையாகக் குறுக்கிவிட முடியாது. காங்கிரஸ் கட்சிக்கும்...

Read More
இந்தியா

கர்நாடகத் தேர்தல் ரவுண்ட் அப்

ஸ்ரீ சித்த கங்கா மடம். கர்நாடகத்தின் தும்கூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடம். பாறைகளாலும், குன்றுகளாலும் சூழப்பட்ட இராமலிங்க, சிவகங்கே மலைத் தொடர்கள். 15-ஆம் நூற்றாண்டிலிருந்து லிங்காயத்தவர்களின் மத போதனைகள் கற்பிக்கப்பட்டு வரும் ஆசிரமம். இங்கு தான் கர்நாடகாவின் ஆட்சி அரியணையைப் பற்றிய முக்கிய...

Read More
இந்தியா

தேசியத் தேர்தல் களம்: என்ன நடக்கிறது? என்ன நடக்கப் போகிறது?

ஏப்ரல் 19-ல் தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதி இந்தியாவை ஆளப்போகும் ஆட்சியாளர்கள் யார் எனத் தெரிந்து விடும். தமிழ்நாடு தொடங்கி வடக்கு, வடகிழக்கு எல்லை வரை பா.ஜ.க. வெற்றி பெற தங்களால் இயன்ற அனைத்துத் தந்திரங்களையும்...

Read More
தமிழ்நாடு

தேர்தலும் சாதியும்

2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் தங்களுடைய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன. தமிழ்நாட்டிலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையில் மூன்று கூட்டணிகள் உருவாகியிருக்கின்றன. மிகத் தீவிரமாகத் தொகுதிப் பங்கீட்டுப்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 90

90. தற்காலிக கவர்னர் ஜெனரல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பரந்த இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கியது ஹைதராபாத். அதன் மன்னர் ‘நிஜாம்’ என அழைக்கப்பட்டார். அவரது பெயர் : மிர் உஸ்மான் அலிகான். இந்துக்கள் மிகுதியாக வாழ்ந்த ஹைதராபாத் மாகாணத்தை ஆண்ட அன்றைய ஹைதராராபாத் நிஜாம்  இன்றைய அரபு நாட்டு...

Read More
நம் குரல்

சரிந்த கோட்டை

மனிதர்களுக்கு, பொருள்களுக்கு எல்லாம் எப்படிக் காலாவதி தினம் என்ற ஒன்று வருகிறதோ அப்படித்தான் போலிருக்கிறது, பாரம்பரியம் மிக்க இயக்கங்களுக்கும். கட்டுறுதி மிக்க, வலுவும் வீரியமும் உள்ள, மக்களைக் கவர்ந்திழுத்துத் தம் பக்கம் தக்க வைத்துக்கொள்ளும் சாதுர்யம் மிக்கதொரு தலைமை இல்லாமல் காங்கிரஸ் என்னும்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 87

87. துண்டாடப்பட்ட இந்தியா ராட்க்ளிஃப்ஃப் கமிஷன் முன்பாக கிழக்கு பஞ்சாபைச் சேர்ந்த முக்கிய சீக்கியப் பிரமுகர்கள் லாகூர் கிழக்குப் பஞ்சாபில் இருக்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான காரணங்களையும், அவற்றுக்குரிய ஆதாரங்களையும், புள்ளி விபரங்களையும் சமர்ப்பித்தார்கள். ஆனால், க்ளிஃப், “ரொம்ப சகஜமாக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!