கோகலேவைச் சிலர் 'ராஜமான்யர்' என்று அழைத்தார்கள். இது பொருத்தமான பெயர்தான் என்றாலும், கோகலேவைப் பற்றிய முழுமையான தோற்றத்தை வெளிப்படுத்துவதில்லை.
Tag - கோபால கிருஷ்ண கோகலே
ஆங்கிலேயர்கள் எங்களுடைய இடத்தில் தங்களை வைத்துச் சிந்திக்கவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு எங்கள் உணர்வுகள் புரியும்' என்றார் கோகலே.
கோகலேவின் பதற்றத்துக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. எண்ணற்ற ஏழை இந்தியர்களுடைய சார்பாக அவர் பேசப்போகிறார். இதைச் சரியாகச் செய்தால் அவர்கள் எல்லாருடைய வாழ்க்கையும் மேம்படும்.
கோகலே கொல்கத்தாவுக்குள் சென்று வருவதற்குக் குதிரை வண்டியைப் பயன்படுத்தினார். பணத்தை, குறிப்பாகப் பொதுப் பணத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த விரும்புகிற காந்திக்கு இது பிடிக்கவில்லை.
ஃபிரோஸ்ஷாஹ் மேத்தா பிபின் கிருஷ்ண போஸுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் 'கோகலே விரைவில் பொதுவாழ்க்கையில் முத்திரை பதிக்கப்போகிறார்' என்று பாராட்டியிருந்தார்.
தனக்குப் பதிலாக உயர்நிலைச் சட்டப் பேரவைக்குச் செல்வதற்குக் கோகலே பொருத்தமாக இருப்பார் என்று மேத்தாவுக்குத் தோன்றியது. தேர்தலில் கோகலேவை ஆதரிக்க அவர் தீர்மானித்துவிட்டார்.
பம்பாய் நகராட்சித் தலைவர் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றிய ஃபிரோஸ் ஷா மேத்தா தேர்ந்த அரசியல்வாதியாகவும், நிர்வாகியாகவும் இருந்தார், 'பம்பாயின் முடி சூடா அரசர்' என்று பாராட்டப்பட்டார்.
ரானடேவின் நினைவாக அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதவேண்டும், அவருடைய உரைகள், எழுத்துகளுடன் அதை வெளியிடவேண்டும் என்று கோகலே விரும்பினார்.
இந்திய உறுப்பினர்கள் சிறுபான்மையினராகவே இருந்தாலும் அவர்களுடைய பேரவை நடவடிக்கைகளால் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் வரலாம், இந்தியர்களுக்கு நல்லது நடக்கலாம். இதெல்லாம் மெதுவாகத்தான் நடக்கும்.
கோகலேவின் தேர்தல் செயல்பாடுகள் திலகரை அச்சுறுத்தியிருக்காது. ஆனால், தேர்தலில் நின்று தோற்றுவிட்டால் அது தனக்கு அசிங்கமாகிவிடுமோ என்கிற கவலை அவருக்கு இருந்திருக்கும்.













