56. முத்திரை பதிப்பார்
1901 மார்ச் 1 அன்று, தான் உயர்நிலைச் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஃபிரோஸ்ஷாஹ் மேத்தா.
இதையடுத்து, அவருடைய இடத்திற்கு, அதாவது, உயர்நிலைச் சட்டப் பேரவையில் பம்பாய் மாகாணத்தின் பிரதிநிதிக்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்ராகிம் ரகிமதுல்லா, பொமன்ஜி தின்ஷா பெட்டிட் என்ற இருவர் இந்தத் தேர்தலில் போட்டியிட முன்வந்தார்கள்.
ஆனால், இவர்கள் இருவரும் தேர்தலைப்பற்றிச் சிந்திப்பதற்குப் பல நாட்கள் முன்பாகவே கோகலேவும் அவருடைய நண்பர்களும் களத்தில் இறங்கியிருந்தார்கள். ஏற்கெனவே மேத்தாவின் ஆதரவைப் பெற்றுவிட்ட கோகலே அதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு பம்பாய்ச் சட்டப் பேரவையின் அலுவலர் அல்லாத இந்திய உறுப்பினர்கள் எட்டுப் பேரில் ஆறு பேரைத் தன் பக்கம் ஈர்த்திருந்தார்.











Add Comment