படிக்கத் தொடங்கும் முன்னர் தயவுசெய்து இரண்டு மூன்று ஸ்வெட்டர்களைப் போட்டுக் கொண்டு வாருங்கள், உலகிலேயே மிகவும் குளிரான நகரமான ரஷ்யாவின் சகா குடியரசில் இருக்கும் யாகுட்ஸிக் (Yakutsk) போகலாம். இங்கே ஒவ்வொரு நாளும் வெப்பநிலை, தண்ணீர் உறையும் பூஜ்ஜியம் செல்சியஸ்ஸுக்கும் கீழே மைனஸ் இருபது டிகிரி...
Tag - அறிவியல்-தொழில்நுட்பம்
ரயன் ஜோன்ஸ் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் இருக்கும் ஃபோர்ட் லாடெர்டெயில் விமான நிலையத்துக்கு அவரின் 88 வயது பாட்டியோடு வந்தார். வந்தவுடன்தான் தெரிந்தது அவர்கள் செல்ல வேண்டிய விமானம் ஆறு மணிநேரம் தாமதம் என்று. இத்தனை மணிநேரத் தாமதத்தை விமான நிறுவனத்தால் முன்கூட்டியே கணித்து பயணிகளுக்குத் தகவல்...
சமீபத்தில் நடந்த நேபாள நாட்டுப் புரட்சியைத் தொடர்ந்து இடைக்காலப் பிரதமர் தேர்வு செய்யப்பட்டது ஒரு செயலியில் என்றால் நம்ப முடிகிறதா? டிஸ்கார்ட் (Discord) செயலியைக் கொண்டு அந்நாட்டு ஜென் ஸீ இளைஞர்கள் யார் தங்களின் புதிய பிரதமராக வேண்டும் என்பதைக் கலந்தாலோசனைகள், கருத்துக் கணிப்புகள் செய்தார்கள். அது...
ஆஷ்டன் குச்சர், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர். 2015களில் பிரபலமாக இருந்த ‘டூ அண்ட் அ ஹாஃப் மென்’ (Two-and-half men) நகைச்சுவை தொடரில் நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் அவரைப் பார்க்க வந்தார் ‘ஹாவி லியு’ (Howie Liu) என்கிற ஒரு மென்பொருள் நிறுவனத் தலைவர். வந்தவர்...
ஈரோடுக்கு அருகில் ஒரு வாழை விவசாயி. கடந்த சில நாட்களாகத் தனது தோட்டத்தில் இருக்கும் செடிகளில் ஏதோ நோய்வாய்ப்பட்டிருக்கிறது எனச் சந்தேகப்படுகிறார். வாழை இலைகளில் வெளிர் மஞ்சள் நிறத்தில் புள்ளிகளைப் பார்க்கிறார். அடுத்த நாட்களில் இவை விரிவடைந்து கரும்பழுப்பு நிறமாக மாறுகின்றன. உடனே தனது செல்பேசியை...
செயலி மூலமாக உள்ளூர் ஆட்டோ, டாக்சி பயணங்களை ஒரே சொடுக்கில் பதிவு செய்யும் வசதியை 2009ஆம் ஆண்டு கொண்டு வந்து புரட்சி செய்தது ஊபர். இதையே இந்தியாவில் அடுத்த ஆண்டில் செய்தது ஓலா. ஊபரின் வேகத்தையையும் சக்தியையும் பார்த்த பல நிபுணர்களும் அடுத்த சில ஆண்டுகளில் உலகளவில் மக்கள் சொந்தமாக வாகனங்களை...
மனிதர்களுக்குத் தங்களது எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் என்றுமே அதிக ஆர்வமுண்டு. வரலாற்றுப் பக்கங்களைப் பார்த்தால், இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலும் ஆரூடம் சொல்பவர்கள், ஜோதிடர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்...
பல செயலிகள் செய்யும் வேலையை ஒரே செயலி செய்ய முடியுமா? இரு நிறுவனர்கள் உருவாக்கிய இரண்டு செயலிகள் ஒன்றாக முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு விடையாக வந்திருப்பது பீப்பர் (Beeper). வாட்ஸ்அப்பைத் தாண்டி நம்மில் பலரும் பல அரட்டைச் செயலிகளைச் சூழ்நிலையைப் பொறுத்து பயன்படுத்துவோம். பலவற்றிலும் கணக்குகள்...
இன்று உலகம் முழுவதும் பலரும் ஒவ்வொரு நாளும் பலமணி நேரத்தை செல்பேசிகளில் காணொளிகளைக் கண்டு செலவழிக்கிறார்கள். இதோடு செயற்கை நுண்ணறிவின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இவற்றின் தாக்கம் மாணவர்களின் கல்வி முறையையும் விட்டுவைக்கவில்லை. பிள்ளைகள் பலரும் தங்களின் பாடங்களைக் கற்க இவற்றையே...
இன்றைக்கு இன்ஸ்டாகிராமில் உணவுப் படங்கள், பயணப் படங்களுக்கு அடுத்தபடியாகப் பிரபலமாக இருப்பவை கைவினைப் பொருட்களைப் பற்றிய பதிவுகள். இந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டு இதற்காகவே ஒரு செயலியை உருவாக்கினால், அது டெடோ (Tedooo) போலவே இருக்கும். மிச்செல் அபெல்கர் (Michelle Apelker) என்கிற இஸ்ரேலியப்...













