ஒன்று ஒன்பது மூன்று பூஜ்ஜியம் பரத்பூர், மதுரா, நூஹ், த்யோகர், ஜம்தாரா, குருக்ராம், அல்வார், பொக்காரோ, கர்மாடண்ட் மற்றும் கிரிதிஹ், இவையாவும் வடஇந்தியச் சுற்றுலாத் தலங்கள் என்றெண்ணி விடாதீர்கள். இந்தியாவெங்கும் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களில் பெரும்பகுதி இந்தப் பத்து இடங்களில் ஏதோ ஒன்றிலிருந்து...
Tag - சைபர் க்ரைம் தொடர்
வெள்ளை மாளிகையில் பேய் அந்தப் புதிய வீட்டின் வாசம் இன்னமும் குறையவில்லை. அவ்வீடு பவித்ராவின் கனவு. அவளுக்கென ஒரு வீடு. பார்த்துப் பார்த்துக் கட்டியிருக்கிறாள். வேலைகள் அனைத்தும் முடிய ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. எல்லாமும் முடிந்து இங்கு வந்து பத்து நாள்கள் ஆகின்றன. தெருமுனையில் இருந்து பார்த்தால்கூட...
நீரின்றி அமையாது உலகு அரங்கம் நிறைந்திருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்தான் திவாகர். இன்னும் சில நிமிடங்களில் அவனைப் பேச அழைத்துவிடுவார்கள். மடியில் அவனது லேப்டாப். தனது ப்ரசன்டேஷனை மீண்டுமொருமுறை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தான் திவாகர். எல்லாமும் சரியாக இருப்பதாகத்தான் தோன்றியது. கண்களை...
கைமாறிய சிம்மாசனம் அன்றிரவு மழை வேகமெடுத்திருந்தது. மூடியிருந்த கண்ணாடி ஜன்னலில் மோதி, மழை எழுப்பிய இரைச்சல் சாதனாவை உறங்கவிடவில்லை. அம்மழையோசை அவள் மனதோசையின் எதிரொலியைப் போன்றிருந்தது. அவ்விரவுப் பொழுது நீண்டதாக இருக்குமெனச் சாதனாவிற்குத் தோன்றியது. சாதனாவிற்குப் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனமொன்றில்...
மேட்ரிமோனி மாப்பிள்ளை ஐந்தாவது ப்ளாட்ஃபார்மில் அன்றைக்கு அவ்வளவாய்க் கூட்டமில்லை. ப்ளாட்ஃபார்மை மின்விளக்குகள் பிரகாசமாக்கியிருந்தன. சற்றுமுன் மறைந்த சூரியன் விட்டுச் சென்ற மங்கலான ஒளி தண்டவாளப் பள்ளத்தில். இருளும் ஒளியும் ஒரே நேர்கோட்டில். அருகருகே. அந்த ரயில் நிலையச் சூழல் ரம்மியமாய் ஒரு...
மானே… தேனே… பொன்மானே மொபைல் திரையின் நீல ஒளி ஹரிணியின் முகமெங்கும் படர்ந்திருந்தது. இருள் சூழ்ந்த அந்த அறையில் தோன்றியிருந்த அச்சிறு ஒளித்தீவு அவளது ஆர்வம் ததும்பும் முகத்தை இன்னும் பிரகாசமாக்கிக் காட்டியது. அவனது அடுத்த மெசேஜிற்காகக் காத்துக்கொண்டிருந்தாள் ஹரிணி. அந்த இடைவெளியிலும் அவனிடமிருந்து...
சோற்றுக் கடன் “மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல… அல்ல…” சத்தமாகப் பாடியபடி உள்ளங்கையில் செல்ஃபோனை வைத்துத் தாலாட்டுவது போலச் சைகை செய்தான் இளங்கோ. அவனது காதலும் தேடலும் அறுசுவை உணவு. அவனொரு ஃபூடீ. அன்னவெறி கன்னையன். சில நிமிடங்களுக்கு முன்பு ஆன்லைனில் அதிரசம் ஆர்டர் செய்திருந்தான் இளங்கோ...
நட்சத்திரத்திற்குப் பின் நாநூற்றொன்று அருணாவின் ஃபோன் மௌன விரதம். இரண்டு நாள்களாயிற்று…. அவளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஒரு மிஸ்டு கால்கூட இல்லை. இவ்வாறிருப்பதையே அவள் கவனிக்கவில்லை. அருணா அப்படித்தான். டாக்டருக்காகக் காத்திருந்தாள். அந்த க்ளீனிக்கின் வெயிட்டிங் ஹாலில் அவள் மட்டுமே...
காதால் கேட்பதும் பொய் “இது எப்டிடா உனக்குப் புரியுது? இவ்ளவு ஃபாஸ்ட்டா பேசுது…” முருகானந்தத்தின் காதுகளில் இருந்த ஹெட்போனைத் தன் காதுகளுக்கு மாற்றிச் சிலவிநாடிகள் கேட்டபின் ஆண்டனிக்கு இந்தச் சந்தேகம் வந்தது. இருவரும் எம்.ஏ. சோஷியாலஜி முதலாண்டு மாணவர்கள். முருகானந்தம் இருக்குமிடம் எப்போதும்...
விஷத்தினும் கொடியது பயம்! கீதா மட்டும்தான் அந்த நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கினாள். வெறிச்சென்றிருந்தது. அங்கிருந்து பத்துநிமிட நடையில் அவளது வீடு. எப்போதும் எட்டு மணியாகிவிடும். ஆனால் இன்றைக்கு ஐந்தரை மணிக்கே வந்துவிட்டாள். மாலை வெயிலைப் பார்ப்பதே அவளுக்குப் புதிதாக இருந்தது. தனியார்...