அக்டோபர் மாதம் ரிஷப ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியில் முடியும் என்று எங்கள் ஊர் முருங்கை மரத்தடி ஜோசியர் சொல்லியிருக்கிறார். 2021 அக்டோபர் மாதம் எழுத்தாளராக வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். எழுத்தாளராகி விட்டேன். எனது அடுத்த இலக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வாங்குவதுதான்...
Tag - நகைச்சுவை
வெளிநாட்டில் வசித்தாலும் நான் ஒரு சுத்தத் தமிழ் பெண். உண்மை, நம்புங்கள். தமிழ்க் கலாசாரத்தை தாங்கிப் பிடிக்க எவ்வளவு பாடுபடுகிறேன் தெரியுமா..? நானொரு தமிழ்ப் பெண் என்று காட்டிக்கொள்ள ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை விடுவதே இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு சென்ற வாரம் கிடைத்தது. எனது பதினொரு ஆண்டு கால...
யாரைப் பார்த்தாலும் இப்போதெல்லாம் இந்த சீரிஸ் பார்த்தேன், அந்த சீரிஸ் பார்த்தேன் என்று வாய் ஓயாமல் சீரிஸ் புராணம்தான் பாடுகிறார்கள். வாயால் பாடுவதோடு முடிகிறதா என்றால் கிடையாது. ஒரு பொம்மையைப் போட்டு ஃபேஸ்புக்கில் முழ நீளத்துக்கு விமரிசனம் வேறு எழுதிவிடுகிறார்கள். உலகத் தரம், உலகத் தரம், உலகத் தரம்...
நடுத்தர வயதைத் தொட்டு விட்டால் சிலருக்குத் தலைமயிர் பிரச்சனை வந்து விடுகிறது. தலைமுடி உதிர்ந்து, பாலைவனமாகக் காட்சியளிப்பதையும், ப்ளேக்ரவுண்டின் ஓரத்தில் மட்டும் புல் முளைத்திருப்பது போல சொட்டைத் தலையின் ஓரங்களில் மட்டும் சொற்ப முடிகள் இருப்பதையும் சொல்லவில்லை…. பலருக்கு முப்பது முப்பத்தைந்து...
இந்தக் கொரோனா லாக் டவுன் வந்ததற்காக மகிழ்ச்சி அடைந்த ஜீவன்கள் வெளிநாட்டில் வசிக்கும் மாமியார்கள் தான். அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கிறது. இங்கே அபுதாபியில் மூன்று வாரம் லாக் டவுன் என்று சொன்னதும் அந்த வாட்சப் குரூப்பில் ஸ்மைலிகள் பறக்க ஆரம்பித்துவிட்டதாம். பின்னே…...
‘இது வெப்ப வாரம். அனல் திங்கள், கனல் செவ்வாய், உஷ்ண புதன், நெருப்பு வியாழன், தீ வெள்ளி…’ என்று ஒரு விளம்பரம் மட்டும் தான் வரவில்லை. மற்றபடி சென்ற வாரத்தில் நியூஸ் சேனல், சோஷியல் மீடியா எங்கு பார்த்தாலும் பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் வெப்பநிலை பற்றித் தான் பேசிக்கொண்டு இருந்தார்கள். நடு...
1978ஆம் வருடப் பஞ்சாங்கம் பார்த்திருக்கிறீர்களா? இல்லை என்றால் என்னைப் பார்க்கவும். 2022 இலும் எழுபத்தெட்டாவது வருடத்துப் பஞ்சாங்கமாக வாழும் ஓர் அபூர்வ உயிரினம் இது. நிற்க. இந்த வரியைக் கொண்டு என்னை செவண்டிஸ் கிட் என்று நினைப்பீர்களானால் அது தவறு. தொலைபேசி மூலமாகப் பொருட்களை வாங்கும் முறை 1979ல்...













