கான் நொறுங்கிப் போனார். அழக்கூட முடியாத வலி. அழுதால் யார் ஆறுதல் சொல்வார்கள்? இது பசுமை குன்றாத புத்தம் புதிய, தரமான துரோகம். எதிர்பாராதது. எதிர்க்க முடியாததும்கூட.
Tag - பலூசிஸ்தான்
இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைவதற்கு கலாட் மன்னர் இன்னும் முடிவெடுக்கவில்லை. எனவே கலாட் ஒரு சுதந்தர நாடாகவே நீடிப்பதைப் பாகிஸ்தான் அங்கீகரிக்கிறது.
எப்படியானாலும் பலூசிஸ்தான் பாகிஸ்தானில் இணைந்துதான் தீர வேண்டும். மன்னரைப் பேசி சரிக்கட்டவெல்லாம் முடியாது. தவிரவும் நண்பர் என்று உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது.
பிரிட்டிஷார் விட்டுச் சென்ற இந்திய நிலப்பரப்பில் முஸ்லிம்கள் வாழும் இடம் அனைத்தும் பாகிஸ்தானைச் சேர்ந்தது என்பதே ஜின்னாவின் நிலைபாடு.
கலாட்டின் சார்பாக பிரிட்டிஷ் பிரதிநிதிகளுடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜின்னாவைக் கேட்டுக்கொண்டார், மிர் அஹ்மத்யார் கான் சாகிப்.
பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த அன்றைய இந்தியர்கள்கூட பிரிட்டிஷ் அரசின் நூறு சதமான விசுவாசிகளாகத்தான் இருந்தார்கள். பலூச்சிகள் விஷயத்தில் மட்டும் இதில் ஒரு மாறுபாடு இருந்தது.
உங்களுக்கு என்ன வேண்டும்? முழு அதிகாரம். பிரிட்டிஷ் பலூசிஸ்தான் ஏஜென்சி வசம் இருந்த பகுதிகளுக்கும் சேர்த்த அதிகாரம். ஆதிவாசிகளின் நிலப்பகுதிகளையும் உள்ளடக்கியது. அவ்வளவுதானே?
உங்கள் ஜின்னாவை உங்கள் ஊரில் கொண்டாடிக்கொள்ளுங்கள். இது பலூசிஸ்தான். அவருக்கு இங்கே நினைவில்லம் எல்லாம் வேண்டாம்.
ஜின்னாவின் அரசியல் அனுபவம், கல்வித் தகுதி, தலைமைப் பண்பு அனைத்துமே சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை. ஆனால் ஜின்னாவைக் காட்டிலும் நேரு பொருத்தமானவர் என்று காந்தி ஏன் நினைத்தார்?
ஜின்னாவை சர்ச்சைக்குரிய மனிதர் என்று குறிப்பிடுவார்கள். அவர் எப்படிச் சிந்தித்தார், எதனால் அப்படியெல்லாம் சிந்தித்தார் என்று சிறிது அகழ்ந்து பார்க்கலாம்.













