99 ஆமாவா பஸ்ஸின் பின்புறப் படிக்கட்டில் இவன் நின்றிருக்க, அதற்குப் பின்னால் இருக்கிற நீண்ட சீட்டில் இரண்டாவதாக அமர்ந்திருந்த நிமா சொன்னாள், ‘என் வேடிக்கையை மறைக்கறீங்க’ என்று. இவனுக்கு முதலில் அவள் என்ன சொல்கிறாள் என்றே புரியவில்லை. இவன் கையைப் பின்னால் இழுத்துவிட்டப் பிறகுதான், எதிரில்...
Tag - மாமல்லன்
98 ஹீரோ ஓரிரு இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களில் தட்டுப்பட்ட, தன் புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்த முகத்தை பஸ்ஸில் பார்த்தது கொஞ்சம் பரபரப்பாக்கிவிட்டது. பெண்களை முன்பின் பார்க்காதவனோ பழகாதவனோ இல்லை என்றாலும் இந்தப் பெண் சற்றே வெட்கத்துடன் சிரித்ததைப்போலத் தோன்றியது வேறு ஆர்வத்தைக் கூட்டிவிட்டது...
97 ஆசனம் ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னால் மீட்சி 6ல் ‘முனியாண்டி’ என்கிற பெயரில் சாரு நிவேதிதா தன்னுடைய பைல்ஸ் பிரச்சனையை வைத்து எழுதியிருந்தான். படித்தபோதே ரொம்ப கெக்கரேபிக்கரே என்று இருப்பதாகப் பட்டது. அவனுக்கு பைல்ஸ் பிரச்சனை இருப்பதென்னவோ உண்மைதான்...
96 சாமானியன் பட்டையான கறுப்பு ஃபிரேம் போட்ட சோடாபுட்டி கண்ணாடியுடன் குண்டாகக் குள்ளமாய் சின்ன கறுப்பு மூட்டை போல இருப்பார் சுந்தா. கூர்கியான குஷாலப்பாவும் கறுப்புதான். ஆனால் கிரிக்கெட் வீரர் என்பதால் நன்கு உயரமும் அகன்ற மார்பும் திடமான தோள்களுமாய் முதல் பார்வைக்கே ‘அட யாரிது’ என்று...
95 எட்டடிக் குச்சு ‘என்ன உன் கதை எதாவது வந்துருக்கா’ என்று கேட்டுக்கொண்டே டாய்லெட்டில் இருந்து, கைக்குட்டையில் ஈரக் கைகளைத் துடைத்துக்கொண்டபடி ரேஞ்சுக்குப் போனார் மோகன். டேபிள் மீது இருந்த ஞானரதத்தை எடுத்துக் காட்டி, ‘இதுவா. பழசு. ரெண்டு மூணு மாசம் முன்ன வந்தது’ என்றபடி போய்...
94 கேட்பாஸ் ஈரோடிலிருந்து அந்த ஆபீஸுக்கு மாற்றலாகி வந்த அன்றே அவன் அப்பாவும் அதே ஆபீசில்தான் இருந்தவர் என்பதைச் சொன்னதும் யார் என்ன என்று கேட்க, இவன் சக்ரபாணி ராவ் என்று சொல்ல, நீங்க என்று பேசிக்கொண்டிருந்த மோகன், ‘ராவ்ஜி பையனா நீ. மோகன், நீங்க ட்ரிப்ளிகேன்தானே, எப்படியும் செகண்ட் சாட்டர்டே...
93. வேட்கை அசோகமித்திரனை வெளியீட்டு விழாவில் பார்த்ததோடு சரி. பார்த்து நாளாயிற்றே என்று சும்மா பார்க்கப்போனான். பச்சையப்பாஸில் படித்துக் கொண்டிருப்பதாய் பேர்பண்ணிக் கொண்டு பரீக்ஷாவில் தீவிரமாக இருந்த காலத்தில் எத்தனை முறை தாமோதர ரெட்டி தெருவில் இருந்த அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றிருக்கிறோம்...
92 நிலைகளும் நிலைப்பாடுகளும் கிட்டத்தட்ட க்ரியா மூடுகிற நேரம். மாடிப்படி ஏறியவுடன் நுழைவாயிலுக்கு எதிரே இருந்த இடத்தில் நீண்ட சோபா செட் போன்ற ஒயர் பின்னிய நாற்காலிகளைப் போட்டிருந்தார்கள். சி மோகனும் அதில் வந்து அமர்ந்துவிட்டார். அவன் அவர் வைகை குமாரசாமி வசந்தகுமார் என்று சும்மா...
91 பரீட்சை திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளைத் தெருவில் வசந்த மண்டபத்துக்கு எதிரில் இருந்த எம் ஓ பார்த்தசாரதி ஐயங்கார் ஸ்கூலில் மூன்றாம் வகுப்புப் படிக்கிறவரை வகுப்பில் முதலாவதாக வந்துகொண்டு இருந்த பையனுக்கு என்ன ஆகிற்று என்று அப்பா அம்மா வியக்கும்படி உயர்நிலைப் பள்ளிக்குப் போனதிலிருந்து...
90 இருவேறு உலகங்கள் ஆபீஸ் விட்டு, வழக்கத்துக்கு மாறாகக் கூட்டம் நெரிந்துகொண்டிருந்த டிரைவ் இன்னில் வந்து அமர்ந்தவனுக்கு ராஜன் உட்பட யாருமே இல்லாதிருந்தது வெறிச்சோடிக் கிடப்பதைப்போல உணரவைக்கவே எரிச்சலுடன் எழுந்து வெளியில் வந்து மரத்தடியில் உட்கார பார்த்தான். அங்கும் கொசுக்கடியைப் பொருட்படுத்தாது...