Home » மாமல்லன்

Tag - மாமல்லன்

இலக்கியம் கதைகள்

அடி

விமலாதித்த மாமல்லன் ‘நரஹரி, நீங்க அண்ணாநகர் குவார்ட்டர்ஸ்லையா இருக்கீங்க’ என்றார் கோயம்பத்தூரிலிருந்து மகனின் உயர் படிப்புக்காகச் சென்னைக்கு  மாற்றல் வாங்கிக்கொண்டு வந்திருந்த சீனியர் இன்ஸ்பெக்டரான ராஜரத்தினம் பேச்சுவாக்கில். ‘ஆமா.’ ‘அங்க நமக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர் இருக்காருங்க’ என்றார்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 127

127 தனிமரம் ரப்பர் செருப்பு கக்கூஸ் போவதற்காக அணிவது என்று குஷாலப்பா சொன்னதிலிருந்து மலிவான விலையில் கிடைக்குமா என்று ஷூ தேட ஆரம்பித்திருந்தான். பர்மா பஜார் பெட்ரோல் பங்கை ஒட்டிய கடையில் கருப்பு நிற ஷூ கொட்டிக்கிடந்தது. பார்க்க புரூஸ்லீ அணிவதைப்போல இருக்கவே, விலை கேட்டான். கடைக்காரன் மலிவாகச்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 126

126 தேவைகள் ‘எனக்கான தேவைகள் மிகவும் குறைவு’ என்று பச்சையப்பாஸ் கல்லூரி மாணவனாக பரீக்‌ஷாவில் சேர்ந்த புதிதில் ஞாநியிடம் எதைப்பற்றிய பேச்சுக்கிடையிலோ சொன்னான். ‘அப்படியா சொல்றே’ என்றார் உடைந்த தொண்டையில். ‘ஆமா. எனக்கென்ன பெரிய தேவை இருக்கு. பெரிய ஆசையே இல்லாதப்ப பெருசா தேவைனு என்ன இருக்கப்போகுது.’...

Read More
இலக்கியம் கதைகள்

வஞ்சம்

இரண்டு, மூன்றெழுத்து மத்தியப் புலனாய்வுத் துறைகள் முட்டிக்கொண்டதில் இரண்டு அதிகாரிகள் பலிகடாக்களாகி, அதில் ஒரு துறையின் தலைவராக இருந்தவர் செய்யாத தவறுக்காகச் சிறையில் 43 நாட்களைக் கழிக்க நேர்ந்து, பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் படாதபாடுபட்டதுதான் இந்தக் கதை. ஒரு துறை இன்னொன்றின் மீது பாய்ந்து அனைத்து...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 125

125 விஸ்கி மதிய உணவு நேரத்தில், இவன் சீட்டுக்குப் பின்னால் இருந்த ஈ ரேஞ்சிற்கு, எப்போதாவது ஒருவர் வலது கையைத் தொடைமேல் வைத்தபடி இழுத்து இழுத்து நடந்து வருவதைப் பார்த்திருந்தான். இன்ஸ்பெக்டர் பிரமோஷனுக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்கவேண்டும் என்று, சைக்கிள் ஓட்டத் தெரிந்திருந்தாலும் நன்றாக...

Read More
இலக்கியம் கதைகள்

விசாரணை

விமலாதித்த மாமல்லன் வீட்டுக் கதவைத் தட்டி, சிபிஐ இன்ஸ்பெக்டர் என்று ஐடி கார்டைக் காட்டி, ரொட்டீன் என்கொயரி என்று உள்ளே நுழைந்து வரவேற்பறை சோபாவில் அமர்ந்து, எக்ஸைஸ் சூப்பிரெண்டண்டண்ட் எஸ்ஆர்பி என்கிற சேதுராமலிங்க பாண்டியனிடம், எத்தனைப் பசங்கள், என்ன படிக்கிறார்கள், எங்கே படிக்கிறார்கள் என்று...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 124

124 குறியீடு அறிவுரை என்று எவர் சொல்வதையும் எடுத்துக்கொள்ளாதவன், பாண்டுரங்கன் சொல்படி டைப்ரைட்டர் முன்னால் உட்கார ஆரம்பித்தான். பின்னணி தெரியாததால் விஸ்வநாதன் நிர்மலா லதா கோஷ்டி, என்ன ஆகிற்று இவனுக்கு என்று மூக்கின்மேல் விரலை வைத்தது. ‘என்ன இவுரு பிராக்டீஸ் பண்றதைப் பாத்தா இந்தத் தடவை கண்டிப்பா...

Read More
இலக்கியம் கதைகள்

உடந்தை

விமலாதித்த மாமல்லன் ‘அதிகாலை நான்கு மணிக்கு கிண்டியில் இருங்கள்’ என்று சிபிஐ இன்ஸ்பெக்டர் லயனல் சொல்லியிருந்ததால் அலாரம் வைத்து எழுந்துகொண்டார் பெஸண்ட்நகர் குவார்ட்டர்ஸில் குடியிருந்த நரஹரி. இதோ இதோ என்று புரண்டு புரண்டு எழுந்திருக்கத் தமக்கு எப்படியும் 20 நிமிடம் ஆகிவிடும் என்பதால் டிராபிக் இல்லாத...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 123

123. ஊரும் சேரியும் ‘என்னடா இப்படிப் பண்ணிட்டிருக்கான் ஜெயகாந்தன்’ என்றான் ம வே சிவக்குமார். ‘என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்’ என்றான் இவன். ‘மைலாப்பூர் சேரில இருக்கற தேவடியாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்வு குடுக்கப்போறேன்னு அந்த செண்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியாகாரன்தான் அறிவில்லாம சொல்றான்னா...

Read More
இலக்கியம் கதைகள்

ஜாதகம்

விமலாதித்த மாமல்லன் I ‘என்ன சார்’ என்னை உங்க குரூப்ல போட்டிருக்காங்க போலயிருக்கு.’ ‘வெல்கம் டு தி குரூப். நமக்குப் போட்டிருக்கிற டூர் ப்ரொக்ராம பாத்தீங்களா மிஸ்டர் நரஹரி.’ ‘பாத்தேன். பொதுவா யூனிட்டைப் பத்தில்லாம் யார்கிட்டையும் விசாரிச்சுக்கிட்டு இருக்கறதில்லே. நடக்கறதுதான் நடக்கும். போய்ப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!