சேதுராமன் பஞ்சநாதன்
1961ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து தியாகராய நகரிலும் பெசன்ட் நகரிலும் வளர்ந்தவர் சேதுராமன். இவருடைய தந்தை பஞ்சநாதன், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னைத் தொழில்நுட்பக் கல்லூரியில் (MIT) பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சேதுராமன் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பைப் படித்தார். மாலை நேரங்களில் தந்தையுடன் பல்வேறு அறிவியல் விதிகளைப் பற்றி விவாதிப்பது இவரது வழக்கமாக இருந்தது. இதுதான் இவர் சாதனைத் தமிழராகச் செயல்படுவதற்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. ஆரம்பகாலக் கல்வியும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களும் இவரை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றன.
கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு மிக்கவராக இருந்தார். குழுவாக இணைந்து செயல்படும் பண்பை விளையாட்டின் மூலமாகவே கற்றார்.











Add Comment