ஆர். சீதாராமன்
உள்ளுர் வங்கியாக இருந்த தோஹா வங்கியை உலக அளவில் மிகப்பெரிய வங்கியாக மாற்றிய சாதனைக்குரியவர் ஆர். சீதாராமன் என்னும் தமிழர்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். காவிரிக் கரையிலிருந்து கத்தாருக்குப் பயணம் செய்து இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் சீதாராமன்.
இந்தி பண்டிட் என்றழைக்கப்பட்ட அப்பா ராகவன், சமஸ்கிருதம் கற்றுத்தரும் ஆசிரியர். தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சத்திலிருந்த காலகட்டத்தில் அவருக்கு வேலை பறிபோனது. நான்கு குழந்தைகளை வளர்த்தாக வேண்டும். அவருடைய அம்மா, தத்தா, பாட்டி என அனைவரும் கிடைக்கிற வேலைகளைச் செய்து குடும்பப் பொறுப்புகளைக் கவனித்து வந்தனர்.










Add Comment