5. கதை சொல்லிகள்
ஆதி மனிதன் தான் வேட்டையாடிய அனுபவத்தையும் அச்சமயங்களில் நடந்த திகிலூட்டும் சம்பவங்களையும் தன் கூட்டத்தினருக்கு – குறிப்பாக மனைவி மக்களுக்கு விளக்கிச் சொல்லி இருப்பான். வார்த்தைகளால், ஒலிகளால் விளக்கியது போக குகைகளில் உள்ள பாறைகளிலும் ஓவியங்களாகவும் வரைந்து காட்டி இருப்பான். அவனே மனித குலத்தின் முதல் கதை சொல்லி. ஓவியக் கலையும் கதை சொல்லலின் ஒரு பகுதியாகத்தான் உருவாகி இருக்கும்.
அடுத்தடுத்து நாகரிகம் வளர்ச்சியடைந்து விவசாய சமூகம் ஆனதும் கதைசொல்லியின் களம் மாறி இருக்கும். உணவுக்கு உத்தரவாதம் கிடைத்தபின் பொழுது போக்கக் கதை கேட்கும் கூட்டம் அதிகரித்து இருக்கும். நாடோடியாய் சுற்றித் திரிந்து தான் பார்த்த, கேட்ட சம்பவங்களோடு தன் கற்பனையைக் கலந்து பலவிதக் கதைகளை ஊர் ஊராகச் சொல்லியபடி சுற்றி வரும் ‘கதையாடிகள்’ உருவாகி இருப்பார்கள். அவர்கள் ஊருக்குப் பொதுவான இடத்தில் கதை சொல்ல ஊரே ஒன்று கூடி அந்த கதையைக் கேட்க ஆரம்பித்து பிற்காலத்தில் இவர்களில் சிலர் அந்தக் கதைகளை இசையோடும் நடனத்தோடும் சொல்ல ஆரம்பித்து தான் ‘பாணர்கள்’ உருவாகி இருப்பார்கள்…
Add Comment