14. தோல் பாவைகள்
தோல்பாவைக்கூத்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
எல்லோருக்கும் தெரியும்படியாகச் சொல்வதென்றால்… ‘தசாவதாரம்’ படத்தின் ‘முகுந்தா முகுந்தா’ பாடலில் அசின் சிறிது நேரம் தோல்பாவைக்கூத்து நடத்தி இருப்பார்.
துணியால் மூடப்பட்ட அறை போன்ற அமைப்புக்குள் ஒரு பக்கம் மட்டும் வெள்ளைத் துணி திரைச்சீலை போல இருக்கும். அதன் மீது விளக்கொளி பட்டு ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதன் பின்னால் இருக்கும் பாவைக்கூத்துக் கலைஞர், தோலால் செய்த உருவப் பொம்மைகளைத் துணிக்கு அருகில் வைத்து கதைக்கேற்றாற் போல ஆட்டுவிப்பார். அந்த பொம்மைகளுக்குக் குரல் கொடுப்பதும் இவரே. பொதுவாக தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் பலகுரல் வித்தகர்களாகவும் இருப்பார்கள். காட்சிக்கு ஏற்றபடி பாவைகளை அடுக்கி வைப்பது, உடனுக்குடன் அவற்றை மாற்றுவது, பாவைக்கு ஏற்றபடி குரலை மாற்றுவது, வசனமும் பிறழாமல் பாவையும் மாறாமல் பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் வித்தகர்களாகவும் இருப்பார்கள்.
Add Comment