Home » திறக்க முடியாத கோட்டை – 7
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 7

07 – போரால் மீண்டெழுந்த சோவியத்

நாள்: 22 – ஜூன் – 1941.

இடம்: கதின் கிராமம், பெலாரஸ்

எட்டு வயது விக்டர் ஆண்ட்ரீவிச், வைக்கோல் களஞ்சியத்தில் அம்மாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். கிராமத்திலிருந்த அனைவரும் அங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தது. வெளியே ஜெர்மனியின் நாஜிப் படைகள் ரோந்தில் ஈடுபட்டிருந்தார்கள். கூடிக்கூடிப் பேசிக்கொண்டார்கள். சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தார்கள். தங்களைப் பயப்படுத்தவே இப்படிச் செய்கிறார்கள் என்று அம்மாவும், பிறரும் பேசிக்கொண்டார்கள்.

வைக்கோல்கள் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டது. தங்களை உயிருடன் எரிக்கப் போகிறார்கள் என்பது புரிவதற்குள், களஞ்சியம் பற்றி எரிந்தது. தீயில் கருகிய கூரைகள், விழத் தொடங்கின. கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியேறியவர்கள், காத்திருந்த நாஜிக் குண்டுகளுக்குப் பலியானார்கள். சுற்றிலும் துப்பாக்கி முனைகள். ஒருவரும் தப்ப முடியவில்லை. ஒன்று, தீயில் கருகிச் சாக வேண்டும். இல்லை, குண்டடிபட்டுச் சாக வேண்டும். சாகும் வழியை அவர்களே தேர்ந்து கொள்ளலாம்.

“அம்மா, நான் எழுந்திரிக்க வேண்டும். வெளியே பார்க்க வேண்டும்,” என்றான் விக்டர். அம்மா தலையைக் கீழே அழுத்தியவாறு, “அசையாமல் அப்படியே இரு” என்றார். விக்டரின் கையில் ஏதோ பலமாக மோத, இரத்தம் வந்தது. “அம்மா, கை வலிக்கிறது. இரத்தம் வருகிறது,” என்றான் மறுபடியும். அம்மா ஒன்றும் பேசவில்லை. ஏற்கெனவே இறந்து போயிருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!