சமத்துவத் தலைவர்
இருபத்தைந்து வயதுள்ள யோகநாதன் ரதீசன், அவரது நெருங்கிய இரு நண்பர்களுடன் நோர்வே நாட்டுக்குச் சென்று விட்டுத் திரும்பி வரும்போது பேர்கன் விமான நிலையம் நோக்கிப் பயணிக்கிறார்கள். வரும் வழியில் நோர்வே நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிநோர் எனும் நிறுவனத்தின் பிரமாண்டமான கட்டடத்தைக் காண்கிறார்கள். இப்படி ஒரு பெரிய நிறுவனத்தை நாமும் உருவாக்கினால் எப்படி இருக்கும் என்று ஆசைப்படுகிறார்கள். அன்றே விமான நிலையத்திலிருந்தே ஒரு திட்டமும் போடுகிறார்கள். வயது இருபதுகளிலேயே உள்ள அந்த இளைஞர்களுக்கு இதுவரை ஒரு நிறுவனத்தை நடத்திய அனுபவம் ஏதுமில்லை. அதிகமாகப் பணமும் இருக்கவில்லை. ஆனாலும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென்னும் ஒரு கனவு இருந்தது.
Add Comment