Home » அர்மீனியா முனியாண்டி விலாஸ்
உலகம் தமிழர் உலகம்

அர்மீனியா முனியாண்டி விலாஸ்

அர்மீனியாவில் ரஷ்யர்களுக்கு அடுத்தது அதிகம் இருக்கும் புலம்பெயர் மக்கள் இந்தியர்கள்தாம். சோவியத் காலம்தொட்டே இந்தியாவிலிருந்து உயர்கல்விக்கு மாணவர்கள் அர்மீனியாவுக்குச் செல்வது வழக்கம். முக்கியமாக மருத்துவப் படிப்புகளுக்கு. அண்மையில் தொழிலாளர்களாக இந்தியர்களின் வரத்து அர்மீனியாவில் அதிகரித்திருக்கிறது. உணவு விநியோகம், வாகன ஓட்டுநர் போன்ற வேலைகளுக்காகச் செல்பவர்கள் அதிகம். தற்போது இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் பேர் வரை அங்கே இருப்பதாக அர்மீனியா அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பஞ்சாப், தமிழகம், கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகம்.

அர்மீனியா அரசாங்கம் இந்தியர்களுக்கான விசா வழிமுறைகளை இன்னும் எளிதாக்கும் வகையில் விதிகளைத் தளர்த்தியுள்ளது. அது மேலும் இந்தியர்களின் வருகையைப் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. 2022ஆம் ஆண்டு 530 பேர்க்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2023ஆம் ஆண்டில் மூவாயிரத்து இருநூறு பேர் அர்மீனியாவுக்குள் சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோரின் கனவு எப்படியாவது மாதம் இரண்டாயிரம் டாலர் சம்பாதித்து, அதில் பாதியையாவது வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதுதான்.

தமிழகத்திலிருந்து சென்று ஏற்கெனவே அர்மீனியாவில் தங்கியிருக்கும் பெரிய தமிழ்க் குடும்பங்களும், சுற்றுலாப் பயணிகளாக நுழைந்து அங்கிருக்கும் பணிவாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் தரகர்களும் தமிழ்நாட்டில் வேலைதேடுபவர்களிடம் பேசி ஆள் சேர்ப்பார்கள். லட்சங்களில் சம்பாதிக்கலாம் என்றும், அர்மீனியாவுக்குச் சென்று தற்காலிகக் குடியிருப்பு சான்றிதழ் பெற்று ஐரோப்பாவுக்குச் செல்லலாம் என்பதைப் போன்ற நம்பிக்கையைத் தருபவர்கள் இவர்கள்தாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!