Home » மியான்மர் மஞ்சு விரட்டு
தமிழர் உலகம்

மியான்மர் மஞ்சு விரட்டு

இந்திய - மியான்மர் பார்டர்

மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய – மியான்மர் இடையேயான தடையில்லா அனுமதி தொலைவைப் பதினாறு கிலோமீட்டர்களிலிருந்து பத்துக் கிலோமீட்டர்களாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதாவது இருபுற எல்லைகளிலும் பத்துக் கிலோமீட்டர்கள் தூரத்திற்கு இரு நாட்டவர்களுக்கும் கடவுச்சீட்டு, விசா அனுமதி ஏதும் இல்லாமல், தினமும் வந்து செல்ல முடியும். ஒரே ஒரு நிபந்தனை, அவர்கள் உள்ளூர்க்காரர்களாக இருக்கவேண்டும்.

இந்தியாவிற்கும் மியான்மார்க்கும் இருக்கும் ஆயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்ட கிலோமீட்டர்கள் பொதுவான எல்லையில் மிசோரம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் ஆகிய இந்திய மாநிலங்கள் அடங்கும், அதில் மணிப்பூர் மிக முக்கியமான பகுதியாகும்.

மணிப்பூரின் மோரே மாவட்டத்திலிருந்து சில நூறு அடிகளில் இருக்கிறது மியான்மர். மியான்மர் பர்மாவாக இருந்தபோதும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கூன் ரங்கனாக இருந்தபோதும் அங்கே பணி நிமித்தம் லட்சக்கணக்கான இந்தியர்கள் இருந்தனர். அதில் பெரும்பான்மை தமிழர்கள். அவ்விடத்தை விட்டு வந்து ஐந்து தசாப்தங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அங்கே போய்விடத் துடித்துக் கொண்டிருப்பவர்கள் தான் மோரே தமிழர்கள்.

1960களில் பர்மா ராணுவ ஆட்சியாளர்கள் வசம் சென்ற போது குடியுரிமைச் சட்டத்தைக் காரணம் காட்டி லட்சக் கணக்கான இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அங்கு அவர்கள் செய்துகொண்டிருந்த வேலையை, தங்கியிருந்த வீட்டை, அதுநாள் வரையில் சேர்த்துவைத்திருந்த உடைமைகளை விட்டு, கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு கிளம்புவதைத் தவிர வேறு சிறந்த உபாயம் அன்று இருக்கவில்லை.

வங்கக்கடலின் அசுரத்தனமான பேரலைகளில் நான்கு – ஐந்து நாள்கள். அது முடிந்ததும் ஒரு வார ரயில் பயணம் செய்து தமிழ்நாடு வந்து சேர்ந்தனர். அப்படி வந்தவர்களுக்கு ஆறு மாத காலம் அகதிகள் முகாம்களில் தங்க இடம் கொடுத்து, பின்னர் அவர்கள் வீட்டை கட்டிக்கொள்வதற்கு நிலங்களை, நிதியுதவிகளை அளித்தது அரசாங்கம். ஆனால் அவர்களால் தமிழ்நாட்டை தங்கள் சொந்த இடமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!