“இப்போது சில பெரிய குடும்பங்களில் வெளிநாட்டிற்குச் சென்று திருமணங்களை நடத்தும் புதிய வழக்கம் உருவாகியிருக்கிறது. இது அவசியமா? ஏன் இந்தியாவிலேயே இத்திருமணங்களை நடத்தக் கூடாது? அப்படிச் செய்வதால் அதற்கேற்ற அமைப்புகளும் வசதிகளும் இங்கு வளருமல்லவா? திருமணத்திற்குத் தேவையான பொருட்களை இங்கேயே வாங்குவதால் நமது நாட்டின் வர்த்தகமும் உயருமல்லவா?” என்ற நியாயமான கேள்வியைக் கேட்டிருக்கிறார் நமது பிரதமர் நரேந்திர மோடி, சென்ற வார மன்-கி-பாத் நிகழ்ச்சியில்.
முன்பெல்லாம் ‘பெரிய குடும்பங்களின்’ திருவிழாவென்பது ஊர்த் திருவிழாபோல நடக்கும். சுத்துப்பட்டு கிராமங்களை அழைத்து மூன்று நாள்கள் மூச்சுமுட்ட விருந்து போட்டு தனது ‘கௌரவத்தை’ அழுத்தமாக நிலைநிறுத்திக் கொள்வர்.
இப்போது உலகமே உள்ளங்கையளவில் சுருங்கிவிட்ட நிலையில் ஊருக்குள் நடத்தப்படும் திருமணங்கள் பழைய ஃபேஷனாகிப் போய்விட்டன. மணப்பெண், மாப்பிள்ளை இருவர் ஊரிலும் இல்லாமல் ஏதாவது ஒரு சுற்றுலாத் தளத்தில் நடத்தப்படும் ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’, ‘பீச் வெட்டிங்’ போன்றவை பாப்புலாராகி வருகின்றன.
Add Comment