Home » கண்ணும் கரன்ஸியும்
உலகம்

கண்ணும் கரன்ஸியும்

கடந்த மார்ச் 24ம் தேதி புதிய 100 திர்ஹம்ஸ் கரன்சியினை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டுள்ளது. எப்போதும் போல் இல்லாமல் இதில் நிறையச் சிறப்புகள் அடங்கியுள்ளன.

ஒவ்வொரு நாட்டின் கரன்சிக்கும் அவர்கள் நாட்டு வழக்கப்படி பெயர் வைத்திருப்பது இயல்புதான். இந்தியாவில் ரூபாய் என்று அழைத்தால் அரபு எமிரேட்ஸில் திர்ஹம்ஸ் என்று அழைக்கிறார்கள். பணத்திற்குப் பல பெயர்கள். நோக்கம் ஒன்றுதான். அரபு எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள புதிய திர்ஹம்ஸ் நோட்டில் வரலாற்றுச் சின்னமான உம்முல் குவைன் கோட்டை ஒரு பக்கம் இருக்கிறது. சிறப்பு வாந்த ஃபுஜைரா துறைமுகமும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 7 மாநிலங்களை (அபுதாபி, துபை, சார்ஜா ,அஜ்மான், ஃபுஜைரா, ராசல்கைமா, உம்முல்குவைன்) இணைக்கும் விதமாக உருவாகிக்கொண்டிருக்கும் எத்திஹாத் ரயில் திட்டத்தின் படமும் உள்ளது. இந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும், புதிய திட்டங்களும் இந்த கரன்சியில் இடம்பெற்றுள்ளன.

அவரவர் நாட்டுப் பணத்தில் அவரவர் நாட்டுச் சிறப்புகளை அச்சிடுவதில் வியப்பில்லை. அனைவரும் வியந்து பின்பற்றத்தக்க விஷயம் ஒன்றையும் செய்திருக்கிறது அரபு எமிரேட்ஸ். அறிமுகமாகியுள்ள புதிய கரன்சியில் ப்ரெய்லி முறையில் பணத்தின் மதிப்பு அச்சிடப்பட்டு உள்ளது. பார்வையற்றவர்களும் நாணயத்தின் ஓரத்தில் கைகளால் தொட்டுப் பார்த்து நாணயத்தின் மதிப்பை எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். இது நாட்டின் இன்குளூசிவ் முயற்சிகளை எடுக்கும் முயற்சியை வெளிப்படுத்துகிறது. 2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஆறு லட்சம் பார்வையற்றோர்களும் பார்வைக் குறைபாடுள்ளவர்களும் இங்கே இருக்கிறார்கள். இப்புதிய முயற்சியால் இவர்கள் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்