Home » உபநிஷத்தின் உபதேசம்
நகைச்சுவை

உபநிஷத்தின் உபதேசம்

கல்கி


சம்பாஷணைக் கலையில் ‘விவாதம்’ என்னும் அம்சம் முக்கியமான ஒரு ஸ்தானத்தை வகிக்கிறது என்று சொல்லலாம். உலகிலே வசிக்கும் சுமார் நூற்றி எழுபத்தைந்து கோடி ஜனங்களுக்குள்ளே தினந்தோறும் நடக்கும் பேச்சுகளில் நூற்றுக்கு எழுபத்தைந்து பங்கு ‘விவாதம்’ என்னும் தலைப்பின் கீழ் வரக்கூடியதாகவே இருக்கும். எனவே, சம்பாஷணை சாஸ்திரத்தில் ‘விவாதம்’ எவ்வளவு முக்கியமானதென்று சொல்ல வேண்டியதில்லை.

விவாதத்தைப் பற்றி நான் நேயர்களுக்குச் சொல்லும் யோசனைகள் மூன்றே மூன்றுதான். அவையாவன:

1. விவாதம் வேண்டாம்.

2. அப்படி விவாதம் செய்தாலும் அதில் ஜயிக்க வேண்டாம்.

3. அப்படி விவாதத்தில் ஜயித்தாலும் ஜயித்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டாம்.

இவைதான் நான் தயாரித்திருக்கும் விவாத சூத்திரங்கள். இனி வருவது இந்தச் சூத்திரங்களுக்கு வியாக்யானம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்