ஜல்லிக்கட்டுப் போராட்டம் – அன்றைய சூழலில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதா? உண்மையில் தமிழனின் கலாசார அடையாளத்தை மீட்டெடுக்க உருவெடுத்தது. ஊழல், விவசாயம், சுற்றுச்சூழல், இன்னபிற அதிருப்திகள் இருந்தபோதும் அமைதிகாத்த தமிழகம், தம் அடையாளத்தை அழிக்க முற்பட்டவுடன் வெகுண்டெழுந்தது அல்லவா?
ரஷ்யப் படைகளைக் கண்டு உக்ரைனின் சாதாரணக் குடிமக்களும் கொதித்தெழுவது இதனால்தான். உக்ரைனிய அடையாளத்தைக் காத்துக்கொள்ளத் தான். உயிரையும் கொடுத்துத் தமது அடையாளங்களைக் காத்துக்கொள்ளும் அளவிற்கு, பறிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று நேற்றுத் தொடங்கியதல்ல இந்த அடையாள அழிப்பு. நீண்ட வரலாறு கொண்டது.
Add Comment