நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் ( 30.08.1875 – 22.01.1947 )
தமிழ் மொழி முதன் மொழிகளுள் ஒன்று என்ற நோக்கு இன்றைக்கு இருக்கிறது. முதன்மொழி என்றால், இயல்பாகத் தானே இயங்கும் வல்லமை பெற்றது; உலகின் தொடக்க மொழிகளில் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ள ஒரு மொழி என்பன போன்றவை கருதுகோள்கள். அந்தக் கருதுகோள்கள் ஏற்பட பல தமிழறிஞர்களின் ஆய்வும் ஆக்கமும் துணை நின்றன. தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் இன்னும் ஒரு படி மேற்சென்று, உலகின் முதல்மொழி தமிழாகவே இருக்கமுடியும் என்ற தங்களது கூற்றையும், அதற்கான ஆய்வு வாதங்களையும் முன்வைக்கிறார்கள். அக்கருதுகோள்களை அவரவர் படித்தறிந்து ஒட்டியோ வெட்டியோ அலசலாம்.
Add Comment