Home » உயிருக்கு நேர் – 3
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 3

திருமணம் செல்வக்கேசவராய முதலியார்

​ திருமணம் செல்வக்கேசவராய முதலியார் (1864 – 1921)

நமக்கு எல்லாம் ‘சொல்லின் செல்வர்’ என்று புகழப்பட்ட ரா.பி.சேதுப்பிள்ளை என்ற தமிழறிஞரை நன்கு தெரியும்; பல்கலைப் புலவர் என்று புகழப்பட்ட தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரைத் தெரியும். மேதைகளான அத்தமிழறிஞர் இருவர்கட்கும் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் என்ற தமிழறிஞர். தமிழ் மொழியில் இலக்கியத் திறனாய்வு, மொழியியல் வரலாறு நோக்கில் சிந்திக்கத் தலைப்பட்ட தொடக்ககால முன்னோடிகளில் ஒருவர் அவர்.

வடமொழியின்றித் தமிழ் இல்லை என்று பலரும் ஏகடியம் பேசிக் கொண்டிருந்த நாட்களில், தமிழ் தனித்து இயங்கும் வல்லமையுடையது என்று நிறுவியவர் கேசவராயர். தமிழ் இலக்கியங்களில் வடமொழிச் சொற்கள் மிகச் சிறிதளவே உள்ளன என்று அவற்றைக் கணக்கிட்டு புள்ளிவிவரப்படி தமிழ் தனித்தேயியங்கும் என்று நிறுவியவர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!