Home » உரி – 170
உரி • நாள்தோறும்

உரி – 170

170. வெல்லும் சொல்

ஆன்பொருநையின் கரையில் சார்வாகன் தனித்திருந்தான். வெளி இருட்டத் தொடங்கிவிட்டதால் நதிக்கரையில் நடமாட்டம் இல்லாதிருந்தது. பட்சிகள் மட்டும் கூச்சலிட்டபடி கூடு திரும்பிக்கொண்டிருந்தன. அவன் அங்கே வந்து நெடுநேரம் ஆகியிருந்தது. ஆனால், எழுந்து செல்ல மனம் வராமல் இருந்த இடத்திலேயே கிடந்தான். அன்றெல்லாம் கருவூராரைக் குறித்து உதுமானி நாயனார் சொன்னதையேதான் அவன் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

மண்ணில் தோன்றிய தலைசிறந்த மனிதர்களுள் முதன்மையானவராக அவரைக் கருதுவதில் தனக்குச் சிக்கல் இல்லை என்று நினைத்தான். ஆனால் அவரை பிரம்மத்தின் தூல வடிவென்றும் காலத்துக்கு அப்பாற்பட்டவரென்றும் நாயனார் குறிப்பிட்டதை அவனால் ஏற்க இயலவில்லை. மிகவும் தயக்கம் மேலோங்க அதைக் கேட்கவும் செய்தான்.

தவறாகக் கருதாதீர்கள். இயற்கை ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு கால்களைக் கொடுத்திருக்கிறது. பாதங்கள் மண்ணில் ஊன்றி நிற்பதற்கும் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏதுவாகவே படைக்கப்பட்டுள்ளன. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவரையும் ஒரு பீடத்தில் ஏற்றி நிறுத்த நினைப்பது ஏன்? இல்லாத சிவனுக்கொரு பீடம், இருக்கும் கருவூராருக்கொரு பீடம். எனக்கென்னவோ அவர் மண்ணில் கால் பதித்து நிற்பவராக இருப்பதே ஈர்க்கிறது. அது ஒன்றே அவரை வணங்கவும் தூண்டுகிறது.

அவன் சொன்னதைக் கேட்டு உதுமானி நாயனார் புன்னகை செய்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!